இலஞ்சம் பெற்ற குடிவரவு, குடியகல்வு திணைக்கள ஊழியர் கைது

மொரட்டுவை பிரதேசத்திலுள்ள நபர் ஒருவரிடம் ரூபா 5,000 பணத்தை பெற்ற குற்றச்சாட்டில், குடிவரவு, குடியகல்வு அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டாளரின் மகளின் இரட்டை பிரஜாவுரிமை பெறுவது தொடர்பான அறிக்கை, ஆவணங்களை தயாரித்து தருவதற்கும் அதனை விரைவுபடுத்துவதற்குமாக, அரச முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் ரூபா 5,000 பணம் கோரியுள்ளார்.

நேற்றையதினம் (21) குறித்த நபர் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் வைத்து இவ்வாறு இலஞ்சம் பெறும்போது கைது செய்யப்பட்டுள்ளதாக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளரும், சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சகருமமான ஜயந்தா பத்திமினி தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இன்று (22) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435