இலவச வீஸா நடைமுறையை எதிர்வரும் ஏப்ரல் 30ம் திகதி வரையில் நீடிக்க அரசாங்கம் தீர்மானித்த்துள்ளது.
கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் 48 நாடுகளுக்கு வழங்கப்பட்டிருந்த இலவச வீஸா நடைமுறை நேற்றுமுன்தினத்துடன் (31.12.2019) நிறைவடைந்துள்ளதையடுத்து மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்குண்டுத் தாக்குதலின் பின்னர் வீழ்ச்சியடைந்திருந்த சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் கடந்த அரசாங்கத்தினால் 48 நாடுகளுக்கான இலவச வீஸா நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கான காலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதியுடன் நிறைவடைந்ததையடுத்து மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்க அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.