உங்கள் EPF நிதிக்கு என்ன நடக்கிறது தெரியுமா?

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ தரவுகளுக்கமைய கடந்த 2015 டிசம்பர் 31ஆம் திகதியன்று ஊழியர் நம்பிக்கை நிதியம் (EPF) ( வரி விதிக்கப்படுவதற்கு முன்) முன்னைய ஆண்டை விட விடவும் நிகர வருமானத்தின் வளர்ச்சி குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊழியர் சேமலாப நிதியமானது கடந்த 2014 ஆண்டில் முன்னைய ஆண்டுகளை விடவும் 20 வீதம் (27 பில்லியன் ரூபா) வருமானத்தை ஈட்டியிருந்த போதிலும் 2015ஆம் ஆண்டில் அங்கத்தவர்களின் நிதியுட்பட, நிதியத்தின் நிகர வருமானம் 12 வீதத்தினால் மட்டுமே அதிகரித்துள்ளது. இது சாதகத் தன்மையாக பார்க்கப்பட்டாலும் கூட கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் 4.8 வீதம் அதாவது 8 பில்லியன் ரூபா வீழ்ச்சியடைந்துள்ளது.

2015 நிதிச்சந்தையில் வட்டி விகிதம் வேகமாக வளர்ச்சியடைந்தமையினால் ஏனைய நிறுவனங்கள் அதிக இலாபம் ஈட்டியுள்ள நிலையில், தொழிலாளர் சார்ந்த ஊழியர் சேமலாப நிதியம் (EPF) ஒப்பீட்டளவில் அதிகரிக்காமல் குறைவடைந்துள்ளமை பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊழியர் சேமலாப நிதிய விவரம் 2014

அதிக சாதகத்தன்மையுடைய நிலைமை நிதிச்சந்தையில் காணப்பட்ட சூழ்நிலையில், ஊழியர் சேமலாப நிதியமானது நிதிச்சந்தையில் 1.664 பில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட பாரிய நிதிக்கு உரிமைக் கொண்டிருந்த போதிலும், கடந்த 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2015ஆம் ஆண்டில் 8 பில்லியனுக்கும் குறைந்த வருமானத்தை ஈட்டி பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. 2014ஆம் ஆண்டில் நிதிச்சந்தையில் குறைந்த வட்டி விகிதமே காணப்பட்டது. 2015ஆம் ஆண்டில் வட்டி விகிதம் அதிகரித்ததுடன், நிதியத்தின் கணக்கு ரீதியான வளர்ச்சியை கவனத்தில் கொள்ளாது 2015ஆம் ஆண்டில் அரச பாதுகாப்பு பத்திரங்களில் முதலீடு செய்து பெறப்பட்ட வருமானமானது 2014ஆம் ஆண்டில் பாதுகாப்பு பத்திரங்களில் முதலீடு செய்து பெற்றுக்கொண்ட வருமானத்தை விடவும் பாதியளவு குறைந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது. அதாவது 2014 ஆம் ஆண்டில் பாதுகாப்பு பத்திரங்களில் முதலீடு செய்து பெற்றுக்கொண்ட வருமானம் 24 பில்லியனாக இருந்தால் 2015 ஆம் ஆண்டு அதே முதலீட்டினூடாக 12 பில்லியன் ரூபா மட்டுமே வருமானமாக பெறப்பட்டுள்ளது.

ஊழியர் சேமலாப நிதியம் 2015

இலங்கை மத்திய வங்கியானது கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் பாதுகாப்புப் பத்திரங்களுக்காக பயன்படுத்தியுள்ள நேரடி முறைகளை கைவிட்டு, 100 வீதம் ஏல முறைக்கமைய செயற்பட்டமையினால் சந்தையில் உருவாகியுள்ள அதிக வட்டி விகித வாய்ப்பினூடாக EPF பெற்றுக்கொள்ளக்கூடிய அதிக வருமானம் ஈட்ட முடியும் என்பதற்குப் பதிலாக 2014/2013 ஆம் ஆண்டுகளில் பாதுகாப்பு பத்திரங்களுக்காக பயன்படுத்தப்பட்ட நேரடி முறை மற்றும் ஏல முறை இரண்டை இணைத்து பயன்படுத்தியும் இலாபத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போனமை பிரச்சினைக்குரிய விடயமாகும்.

2015ஆம் ஆண்டு ஆரம்பக்காலப்பகுதியில் அரசாங்க உயர் அரசியல் பிரதானிகள் கருத்து தெரிவிக்கையில், இலங்கை மத்திய வங்கியினால் EPF நிதியத்தை முகாமைத்துவப்படுத்தும் முயற்சியினூடாக நேரடி முறை மூலம் பத்திரங்கள் வெளியிடப்படுவதனால் பத்திரங்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டதாகவும், EPF நிதியத்தை மத்தியவங்கியில் இருந்து நீக்கி சிங்கப்பூர் தமசெக் வடிவம் என்று கூறப்படும் பங்குப்பொருத்தனை ஊடாக EPF நிதியத்தின் நிதியை தனியார் நிதி முகாமையாளர்களிடம் கையளித்து, நிதியத்தின் முதலீட்டு முகாமைத்துவ பொறுப்பை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று பத்திரங்களை வெளியிடும் நேரடி முறையினூடாக வாதிட்டனர். அரசாங்கம் குறைந்த வட்டிக்கு தொழிலாளர் சேமலாப நிதியத்தின் நிதியை தமது தேவைகளுக்கு கடனாக பெற்றுக்கொள்வதனால் அதன் கணக்கு சொந்தக்காரர்களுக்கு 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் நட்டம் ஏற்பட்டது என்பதை அடிப்படையாக கொண்டே இவ்வாறு வாதிடப்பட்டது.

அரசாங்க உயர் மட்டத்தினர் கடந்த 2015ஆம் ஆண்டு கூறியது போன்று தற்போது பாதுகாப்புப் பத்திரங்கள் நூறு வீத ஏல முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. சந்தையில் உள்ள வட்டி விகிதமானது விரைவாக அதிகரித்துள்ளது. ஊழியர் சேமலாப நிதியத்தின் முழு முதலீட்டாளர்களில் 89.6 வீதமானவர்கள் 2014ஆம் ஆண்டில் திரைசேரி பத்திரம் மற்றும் ரசீதுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடானது 2015ஆம் ஆண்டில் 92.7 வீதம் அதிகரித்துள்ளது. (நிதியத்தின் முழு பெறுமதி 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2015ஆம் ஆண்டில் 12 வீதத்தில் மேலதிகமாக அதிகரித்துள்ளது). எனினும் EPF நிதியத்தின் இலாபத்தின் வளர்ச்சி 2014ஆம் ஆண்டில் (முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில்) காணப்பட்ட 27 பில்லியன் ரூபாவில் (20%) இருந்து 2015ஆம் ஆண்டில் (2014 வருடத்துடன் ஒப்பிடுகையில்) 8 பில்லியன் (4.8 %) இற்கு குறைந்துள்ளது.

அரசாங்க பொருளாதார ஆலோசகர்களின் முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பாக அடையாளங்காட்டப்பட்டுள்ள வாய்ப்புக்களுக்கமைய, EPF நிதியத்தின் பத்திர முதலீட்டு ஒதுக்கீடு அதிகரித்து, ஏல முறை நூறு வீதம் நடைமுறைப்படுத்தப்பட்டு, வட்டியும் அதிகரித்துள்ள போது, முன்னைய வருடங்களுடன் ஒப்பிடுகையில், இலாபம் அதிகரிக்காமல் வீழ்ச்சியடைந்துள்ளது ஏன்? அப்படியானால் EPF நிதியத்தின் சாதகத்தன்மையை பயன்படுத்தி தமது கசினோ சூதாட்டத்தை அதிகரித்துக்கொண்டுள்ளது யார் என்பது தற்போது தெளிவாகிறது.

மத்திய வங்கி பத்திரங்கள் தொடர்பாக கோப் குழு கண்டறிந்தவை, மற்றும் தற்போது வெளியாகியுள்ள மத்திய வங்கி தள பரிசோதனை (onsite examination) அறிக்கைகளுக்கமைய பர்பேசுவல் ட்ரேன்ஷரீஸ் நிறுவனமானது முதன்மை சந்தையில் கொள்வனவு செய்த பத்திரங்கள், குறுகிய காலத்தில் செயற்கையான முறையில் விலை அதிகரிக்கப்பட்டு EPF நிதியத்தின் நிதியை இரண்டாம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை உறுதியாகிறது. இறுதியில் சில பத்திரங்களில் இன்று நிலவும் சந்தை விலைக்கமைய EPF நிதியத்தில் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது.

சந்தையில் வட்டி விகிதம் அதிகரித்தாலும் EPF நிதியத்தின் 2015 ஆண்டில் அதன் கணக்கு உரிமையாளர்களுக்கு பெற்றுகொடுக்கும் வட்டியானது 2015ஆம் ஆண்டில் 10.5 வீதமாக தொடர்ந்தும் காணப்படுகிறது. சந்தையில் வட்டி விகிதத்திற்கமைவாக கணக்கு உரிமையாளர்களின் நிதியத்தின் பெறுமதி அதிகரிக்காமை, நீண்ட காலம் ஓய்வூதிய நிதியமாக இருக்கின்றமை பாரிய பிரச்சினையாகும். இன்னும் பத்து வருடங்களில் இலங்கையின் சனத்தொகையில் தங்கி வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை காணப்படுகின்றமையினூடாக பல நெருக்கடிகளை சந்திப்பதை தவிர்க்க முடியாது.

ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட இந்த பிரச்சினை நீண்டகாலத்திற்கு தாக்கம் செலுத்தும் அபாயம் காணப்படுகிறது. EPF நிதியத்தின் கணக்கிற்கு தொடர்ச்சியான பங்களிப்பு வழங்கும் கணக்குகளின் எண்ணிக்கை 2013ஆம் ஆண்டில் இருந்து 2.4 மில்லியனாக வரையறுக்கப்பட்டுள்ளதுடன் பங்களிப்பை வழங்கும் கணக்கு உரிமையாளர்களின் எண்ணிக்கை வளர்ச்சியடையவில்லை. பொருளாதார வளர்ச்சிக்கமைவாக பங்களிப்பு வழங்கும் கணக்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கவில்லையென்பதே கசப்பான உண்மை. இலங்கை முன்னெடுக்கும் முறைசாரா தொழில் முறை (informalization of work) கொள்கையின் கீழ் EPF இற்குப் பங்களிப்பு செய்யும் தொழில்கள் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்க முடியாது.

ஒப்பீட்டளவில் எதிர்வரும் வருடங்களில் ஓய்வு பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் அதனை ஈடு செய்யும் வகையில் ஊழியர் உள்வாங்குவதற்கான சாத்தியங்கள் காணப்படவில்லை.

தற்போது தோன்றியுள்ள EPF நிதிய துஷ்பிரயோகத்தை உடனடியாக நிறுத்துவதற்கு கணக்கு உரிமையாளர்கள் முன்வராவிட்டால், சில ஆண்டுகளில் நிதியமானது மீட்க முடியாத அதலபாதாளத்தில் விழும் என்பது உறுதி

ஆங்கில மொழியிலான தரவுகளுக்கு

EPF-Financial-Highlights-2014-English

EPF-Financial-Hightlights-2015-English

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435