உணவு தயாரிப்பு, விநியோகத்திற்கு GMP சான்றிதழ் கட்டாயம்

2017 ஆம் ஆண்டு முதல் உணவு தயாரிப்பு, விநியோக நிறுவனங்கள்,சுகாதாரத்துக்கு பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்திய ஜீ.எம்.பி. சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை இலங்கை கட்டளைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், தற்போது வரை அதற்கான விண்ணப்பங்கள் சுமார் 40 கிடைத்துள்ளதாகவும் அதில் 10 நிறுவனங்களுக்கு அந்த சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் டீ.ஜீ.ஜீ. தர்மவர்தன குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உணவு பாதுகாப்புக்கான எச்.ஏ.சி.சி.பி. சான்றிதழை ​பெற்றுள்ள நிறுவனங்கள்,ஜீ.எம்.பி. சான்றிதழை பெற்றுக் கொள்வது கட்டாயமில்லை என அவர் கூறியுள்ளார்.

நன்றி- தமிழ் விண்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435