உதவி சுங்க அதிகாரி தரம் 11 – ஆட்சேர்ப்பை எதிர்க்கும் தொழிற்சங்கம்

உதவி சுங்க அதிகாரி தரம் 11 இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த 129 பேரை சேவையில் இணைப்பதற்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில் 149 பேர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் என்று சுங்க தொழிற்சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விடவும் மேலதிகமாக 14 பேரை நேர்முகத்தேர்வில் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தபோதும் அது ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணமல்ல என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இப்பதவிக்கான போட்டிப்பரீட்சையில் சித்தியடைவதற்கு 60 புள்ளிகள் பெறவேண்டும். அந்த புள்ளிகளை பெற்ற 387 பேர் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

நேர்முகத்தேர்வின் பின்னர் 129 பேர் சேவையில் இணைப்பதற்கான அனுமதி கிடைத்திருந்தபோதிலும் ஒரே புள்ளிகளை பெற்றவர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவில்லை. இதற்கு முன்னர் 2012, 2015 ஆண்டுகளில் ஒரே புள்ளிகளை பெற்றவர்கள் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான அனுமதி கிடைக்கவில்லை. எனினும் இவ்வருடம் மேலதிகமாக ஆட்களை இணைத்துக்கொள்ளும் போது ஏதோவொரு வகையில் அரசியல் செல்வாக்குப் பெற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என தாம் சந்தேகிப்பதாக சுங்க திணைக்கள தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435