உயிர்கொல்லி கொரோனா- அவதானத்துடன் செயற்படுவோம்!

கொரோனா.. இன்று உலக மக்களை பீதியடடையச் செய்துள்ள ஒரு வைரஸ். இவ்வைரஸில் இருந்து எப்படியெல்லாம் தனது நாட்டையும் மக்களையும் பாதுகாத்துக்கொள்வது என்று உலக நாடுகளின் தலைவர்கள் தலையை பிய்த்துக்கொண்டிருப்பது அந்தந்த நாடுகளில் இருந்து வௌிவரும் செய்திகள் எமக்கு சுட்டிக்காட்டுகின்றன. இன்று வரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 259 என பிபிஸி வௌியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் முதன்முதலாக பரவியதாக கூறப்படும் சீனாவில்தான் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக முதன்முதல் பரவியதாக நம்பப்படும் வுஹான் மாநிலத்திலேயே அதிக உயிரிழப்புகள் காணப்படுகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 12,000 பேரும் உலகம் பூராவும் சுமார் நூறு பேரும் இத்தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று உலக சுகாதார ஸ்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது. பிரித்தானியா, அமெரிக்கா,  ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய வளர்ந்த நாடுகளையும் விட்டுவைக்கவில்லை கொரோனா.

019-nCoV என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் சீனாவிலிருந்து பரவ தொடங்கியுள்ளது. ஆனால், எதன்மூலமாக இந்த வைரஸ் பரவ தொடங்கியது என்பதை இன்னமும் அடையாளங்காண முடியாமல் தவிக்கிறது சீனா.

11 மில்லியன் (1.1 கோடி) மக்கள் தொகை கொண்ட மத்திய சீன நகரமான வுஹானில் இந்த நோய் முதலில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது.  வுஹானில் உள்ள அசைவ உணவுகளின் சந்தையில் இருக்கும் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து பரவி இருப்பதாக சீன அதிகாரிகள் கூறுகிறார்கள். அதனால் விலங்குகளிடம் பாதுகாப்பற்ற வகையில் நேரடி தொடர்பை வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு சமைத்த பிறகே சாப்பிட வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் என்பவை பரவலான தொகுப்பைச் சேர்ந்தவை. இந்த வைரஸ் குடும்பத்தில் ஆறு வகைகள் மட்டுமே மக்களை பாதிக்கக் கூடியவையாக இருந்தாலும் தற்போது நம்மை வாட்டும் கொரோனா ஏழாவது வைரஸாக அடையாளங்காணப்பட்டுள்ளது. மனிதர்களிடமிருந்த மனிதர்களுக்கு பரவக்கூடிய  இவ்வைரஸ், சீனாவில் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ளதாலும், அங்குள்ள மக்கள் வைரஸ்களை பரப்பும் விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாலும் கொரோனா வைரஸ் சீனாவில் தொடர்ந்து பரவுவதற்கான காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார் எடின்பர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் மார்க் வூல்ஹவுஸ்.

இவ்வைரஸ் பரவும் வேகத்தைக் கவனத்திற்கொண்டு உலக சுகாதார தாபனம் (WHO) அவசர நிலைமையை பிரகடனப்படுத்தியுள்ளது. ஏற்கனவே தொற்று ஏற்பட்டுள்ள சீனாவை விடவும் ஏனைய நாடுகளில் பாதிப்பு ஏற்பாடாது தடுப்பதற்கு இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சுகாதார தாபனம் சுட்டிக்காட்டுள்ளது.

பலவீனமான சுகாதாரச்சேவை தொகுதியை கொண்ட நாடுகளிலேயே கொரோனா வைரஸ் அதிகமாக பரவும் வாய்ப்பு உள்ளது என்கிறார் ஜெனீவாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த உலக சுகாதார தாபனத்தின் தலைவர் கலாநிதி டெட்ரோஸ். மேலும் இதற்கு முன்னர் தொற்றாத வைரஸாக இருந்த போதிலும் அதற்கு எதிராக இதற்கு முன்னர் இல்லாத அளவுக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவால் இருப்பதற்கு சீன அரசு மேற்கொண்டுள்ள கடுமையான நடவடிக்கையானது பாராட்டுக்குரியது. சீனாவுடனான வர்த்த செயற்பாடுகள் மற்றும் சுற்றுலா பயணங்களை எந்த காரணம் கொண்டும் நிறுத்தவேண்டியதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையை பொருந்தவரையில் இதுவரை இலங்கைக்கு வருகைத் தந்த சீன சுற்றுலா பயணியொருவருக்கு மட்டும் இவ்வைரஸ் தொற்று இருந்தமை கண்டறியப்பட்டது. அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறந்த சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளார் என்று அறவிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கமும் மிக நுண்ணியமான முறையில் இவ்வைரஸ் பரவாமல் மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாராட்டக்குரியதே.

பல நூற்றாண்டுகளாக கொரோனா வைரஸின் தாக்கம் இருந்து வந்தாலும் 2002-ம் ஆண்டுக்கு முன்புவரை உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இதுவரை இப்போதைய புள்ளிவிவரங்களின்படி தொற்று விகிதம் அதிகமாகவும் நோய்த்தாக்கம் குறைவாகவும் இருப்பதாகத் தெரிகிறது “2019-ஆம் டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள விலங்கு இறைச்சிக்கூடத்திலிருந்து இந்த வைரஸ் பரவியதாக சந்தேகிக்கப்படுகிறது. வௌவால்களில் இந்த வைரஸ் மாற்றம் அடைந்திருக்கக்கூடும் என்றாலும், பாம்புகளின் மூலம் இவை பரவியிருக்கலாம் என்று முதலில் அறிவிக்கப்பட்டாலும் அதனை பல ஆராய்ச்சியாளர்கள் ஏற்கவில்லை. இவ்வைரஸ் பறவைகளையே தாக்கும் என்றும் அவர்கள் கருத்து வௌியிட்டிருந்தனர்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முடியுமா?

பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கலாம். ஆனால் கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு, அந்த நோயாளியின் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்த நிலையில் இருந்தால், உயிர்பிழைக்கும் வாய்ப்பு குறைவுதான். சாதாரண காய்ச்சல் போலதான் இந்த கொரோனா வைரஸ் காய்ச்சல் தொடங்கும். சளி, தொடர் இருமல், உடல்வலி என தொடங்கி, மூச்சுத்திணறல் அதிகரிக்கும்.

  • மனிதர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துதல், அதிகம் மக்கள் கூடும் இடங்களை தவிர்த்தல்
  • அடிக்கடி கை கழுவுவதை ஊக்குவித்தல்
  • கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில்,
  • முழு பாதுகாப்பு உபகரணங்களுடன் கூடிய மருத்துவ பணியாளர்களை கொண்டு சிகிச்சை அளிப்பது.
  • கொரோனா வைரஸ் யாரிடமிருந்து/ எங்கிருந்து தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பரவியுள்ளது என்பதை கண்டறிதல்.

அறிகுறிகள் என்ன?

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். அதன் பிறகு, வறட்டு இருமலை உண்டாகி, ஒரு வாரத்திற்குப் பிறகு, மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கிறது.
இந்த வைரஸால் உறுப்பு செயலிழப்பு, நிமோனியா உள்ளிட்டவையும், அதிகபட்சமாக உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது.

கொரோனா வைரஸின் பரவல் தானாக கட்டுக்குள் வராது என்பது உறுதிப்படத் தெரியவந்துள்ளதால், தற்போதைக்கு அதை கடுமையான முயற்சிகளின் மூலம் சீன அதிகாரிகளால் மட்டுமே கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

சிகிச்சை

கொரோனா வைரஸை தாக்குப்பிடிக்கும் அளவுக்கு மனிதர்களுக்கு வழங்க கூடிய நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் எதுவும் இப்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, கொரோனா வைரஸை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுவதைத் தடுப்பதே இப்போதைக்கு இருக்கும் ஒரே தெரிவு.

ஆர்த்தி- வேலைத்தளம்

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435