உள்நாட்டு விவசாயிகளை பாதுகாக்குமாறு கோரிக்கை

நாட்டில் அரிசியின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக அரசாங்கம் வெளிநாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்துவருகின்ற நிலையில், அரிசி இறக்குமதியை நிறுத்தி உள்நாட்டு விவசாயிகளை பாதுகாப்பதற்கான

நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அகில இலங்கை கமத்தொழில் சம்மேளனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தம்புள்ளையில் நேற்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை கமத்தொழில் சம்மேளனத்தின் அமைப்பாளர் நாமல் கருணாரத்ன இந்தக் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்நாட்டு விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லை நெல்லை பதுக்கி வைக்கவோ அல்லது விநியோகிப்பதைத் தடுக்கவோ முடியாது.

நெல்லை பதுக்குவதற்கு எதிராக 52 விசேட சட்ட ஏற்பாடுகள் உள்ளன. இந்த நிலையில், நெல் ஆலை உரிமையாளர்களால் நெல் பதுக்கி வைக்கப்பட்டிருக்குமாயின், அவற்றை வெளியில் கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கமத்தொழில் சம்மேளனத்தின் அமைப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் உள்நாட்டு அரிசி வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இறக்குமதி மற்றும் உள்நாட்டு அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, இறக்குமதி செய்யப்பட்ட நாடு அரிசி கிலோ ஒன்று 70 ரூபாவாகவும், உள்நாட்டு நாடு அரிசி கிலோ ஒன்று 80 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட பச்சை அரிசி கிலோ ஒன்று 70 ரூபாவாகவும், உள்நாட்டு பச்சை அரிசி கிலோ ஒன்று 78 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், இறக்குமதி செய்யப்பட்ட சம்பா அரிசி கிலோ ஒன்று 80 ரூபாவாகவும், உள்நாட்டு சம்பா அரிசி கிலோ ஒன்று 90 ரூபாவாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435