கல்வியியற் கல்லூரிகளில் கற்கும் மாணவர்கள் அவர்களுக்கான உள்ளக பயிற்சிக் காலத்தை நீடிக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்,
நாடளாவிய ரீதியில் உள்ள 19 கல்வியியற் கல்லுரிகளில் சுமார் ஐந்தாயிரம் பேர் வரை கல்வியியற் கல்லூரிகிளில் கல்வியியற் டிப்ளோமாவை கற்று வருகின்றனர். இம்மாணவர்களுக்கு ஒரு வருடம் வழங்கப்படும் உள்ளக பயிற்சியானது, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2 மாதங்கள் குறைந்த போதிலும் பயிற்சிக்கான காலத்தை நீடிக்க வேண்டாம் என ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் கல்வியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் குறித்த ஒன்று அல்லது இரு மாத காலப் பயிற்சியை ஆரம்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்படுமாயின் தாம் குறுகிய காலத்திற்கு தங்குமிட வசதிகளை தேடிக்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும். அத்துடன் இன்னும் கொரோனா அச்சம் முற்றாக நீங்காத நிலையில் வீட்டு உரிமையாளர்கள் குறுகிய காலத்திற்கு தங்குமிடங்களை வழங்க தயங்குவர். பாடசாலைகள் மூடப்பட்டிருந்தபோதிலும் பிள்ளைகளுக்கு கற்பிப்பதற்கான பயிற்சிகளை முழுமையாக பெற்றுள்ளனர்.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கல்வியமைச்சர் டலஸ் அலகப்பெருமவிடம் நேரம் ஒதுக்கித் தருமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் மஹிந்த ஜயசிங்க கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The Island
வேலைத்தளம்