உள்வாரிப் பட்டதாரிகள் 300 பேர் நியமனம் பெற வரவில்லை

அண்மையில் வழங்கப்பட்ட அரச நியமனங்களை பெற்றுக்கொள்ள 300 உள்வாரிப் பட்டதாரிகள் வருகைத்தராமையினால் விசேட பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு அந்நியமனங்கள் வழங்கப்படும் என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் உள்வாரிப் பட்டதாரிகளுடனான கலந்துரையாடல் பெருந்தோட்டத்துறை அமைச்சின் கேட்போர்கூடத்தில் அண்மையில் இடம்பெற்றபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

30.05.2018 மற்றும் 31.12. 2018 காலப்பகுதியில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி அதிகாரி பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் இந்நியமனம் வழங்கலில் விசேடத்துறை பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் இக்கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டியுள்ளது.

2016ம் ஆண்டு பல்கலைக்கழக படிப்பை முடித்து வௌியேறவேண்டிய பட்டதாரிகள் விசேட கற்கை நெறியை பூர்த்தி செய்யவேண்டியிருப்பதால் 2017ம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வௌியேறுகின்றனர். 4 வருடங்கள் கற்பதே இதற்குக் காரணம். அதற்கமைய 2016ம் ஆண்டு சாதாரண பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பட்டதாரிகள் நியமனம் பெற்றபோதிலும் விசேட பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்கள் தொழில்வாய்ப்பை பெறவில்லை என்றும் அச்சங்கம் அமைச்சரிடன் சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கமைய இம்மாதம் 24ம் திகதி வழங்கப்படவுள்ள நியமனங்களில் விசேட பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435