தொழிலாளர்களிடம் ஒரு வேண்டுகோள்!

கடந்த 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தின திருப்பலியின் போது பல தேவாலயங்கள் மற்றும் பிரபல ஹோட்டல்கள் மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற தீவிரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.

இத்தாக்குதலில் அகால மரணமடைந்த எமது சகோதர சகோதரிகள் மற்றும் வௌிநாட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ளும் அதேநேரம் காயமடைந்த நிலையில் தற்போது சிகிச்சை பெற்றுவரும் அனைவரும் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறோம்.

எமது நாட்டுக்கு இடம்பெற்ற இவ்வனர்த்தம் மிகவும் வேதனைக்குரியது. இவ்வாறான நிலையில் கூட தமது சுயநல நோக்குடனும் அரசியல் லாபத்துக்காகவும் செயற்படுபவர்களை மிக வெறுப்புடன் நோக்குவது நாட்டை நேசிப்போரின் கடமை. அனர்த்தம் இடம்பெற முன்னர் உரிய நடவடிக்கை எடுக்காமல் தற்போது ஒருவருக்கொருவர் காட்டிக்கொடுத்துக்கொள்வது கவலைக்குரிய விடயமாகும். நாட்டில் உள்ள உழைக்கும் வர்க்கத்தினர் சிலரது அரசியல் லாபத்திற்கு விலைபோகாமல் உறுதியாக செயற்படுவது மிகவும் அவசியம். தீவிரவாத்திற்கு சாதி, மதம், தராதரம், பால்நிலை என்பன இல்லை என்பது போலவே ஒரு சிறு தரப்பினர் இவ்வாறு நடந்து கொண்டமையினால் ஏனைய சமயத்தினர் எந்த விதத்திலும் துன்புறுத்தல்களுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகாமல் செயற்பட வேண்டும்.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இந்த சந்தர்ப்பத்தை பலர் பயன்படுத்த முயலலாம். இன மற்றும் சமய ரீதியான முறுகல் நிலையை ஏற்படுத்த முயற்சிக்கலாம். இதனை புரிந்து நாம் தௌிவான சிந்தனையுடன் இருத்தல் வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித வேறுபாடுகளுமின்றி நாம் சகோதரத்துவத்துடன் உதவவேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தில் உழைக்கும் வர்க்கத்தினர் சுரண்டப்படலாம். கடுமையான சட்ட திட்டங்களால் பாதிக்கப்படலாம். ஒன்றுமையை சீர்குழைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்படலாம். இவற்றை கவனத்திற்கொண்டு நாட்டின் தேசிய பாதுகாப்பையும் கருத்திற்கு கொண்டு செயற்படுமாறும் ஏனையோரின் பாதுகாப்பு, கௌரவம் என்பவற்றை பாதுகாக்கும் வகையில் செயற்படுமாறு வேலைத்தளம் / வெடபிம இணையதளம் உழைக்கும் வர்த்தகத்தினரிடம் கோருகின்றது.

wedabima.lk/archive.velaiththalam.lk

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435