ஊடகங்களில் செய்தி வெளியிடும் போது பின்பற்றப்பட வேண்டிய ஒழுக்க விதிமுறைகள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக, பிரதி ஊடக அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார்.
“ இனவாதம், மதவாதம் போன்றவற்றை தூண்டும் செய்திகள், பொய்யான செய்திகள் மற்றும் பிழையான மொழிப் பிரயோகத்துடனான செய்திகள் பிரசுரமாவதாக பலர் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த பிழைகளை தவிர்க்கும் நோக்கில் ஒழுக்க விதிகள் உருவாக்கப்படவுள்ளன. இந்த ஒழுக்க விதிகளை உருவாக்கும் பணிகளில் அரசாங்கம் தலையீடு செய்யாது. ஊடக நிறுவன ங்களின் பங்களிப்பினூடான ஓர் குழுவினால் ஒழுக்க விதிகள் தயாரிக்கப்படவுள்ளன.
இந்த ஒழுக்க விதிகளை மீறினால் எவ்வாறான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என்ப தனையும் குறித்த குழுவே நிர்ணயம் செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.
வேலைத்தளம்/ உதயன்