ஊரடங்கு நீக்கப்பட்ட கண்காணிப்புகள் தீவிரமாக்கப்படும்!

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் கொவிட் ஒழிப்புக்காக நடைமுறைப்படுத்தப்படும் சுய தனிமைப்படுத்தல் நடைமுறைகளை கடுமையாக கண்காணிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் சந்திக்கும் கொவிட் ஒழிப்பு சிறப்பு செயலணி இன்று (05) முற்பகல் ஒன்றுகூடிய போதே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என கண்டறியப்பட்ட அனைத்து குடும்பங்களும் தத்தமது வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள். தற்போது நாடளாவிய ரீதியில் 31,457 வீடுகளில் 84,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் மட்டும் 13,911 குடும்பங்களைச் சேர்ந்த 40,676 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னரும் முறையாகக் கண்காணிக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நோய்த்தொற்றாளர்கள் சமூகத்தில் கண்டறியப்பட்டால் அவர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்கள் வசிக்கும் பிரதேசம் பற்றி விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். தேவை ஏற்படின் அந்த பிரதேசங்களைத் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தோட்டங்கள் மற்றும் அடுக்குமாடி வீடுகள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது விரிவாக இன்று கலந்துரையாடப்பட்டது.
பொருளாதார மத்திய நிலையங்களை மொத்த விற்பனைக்கு மட்டும் மட்டுப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றியும் PCR பரிசோதனைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டும் மிகுந்த கவனத்துடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மரக்கறி, பழங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துக்கொண்டு மாவட்டங்களுக்கிடையில் போக்குவரத்தில் ஈடுபடும் லொறிகளுக்கு ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரங்கள் அவசியமில்லை. கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தின் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

தனியார் வைத்தியசாலைகளின் பங்களிப்புடன் சுகாதார அமைச்சினதும் கடற் படையினதும் கண்காணிப்பின் கீழ் வர்த்தக வலயத்தை அண்டிய பிரதேசங்களில் PCR பரிசோதனைகளை எழுமாறாகவும் தொடர்ச்சியாகவும் மேற்கொள்வது எனவும் இச்சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435