வட மாகாணம் மற்றும் கொழும்பு, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களில் அமுலாகும் ஊரடங்கு சட்டம் மார்ச் 24ஆம் திகதி காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு, அன்று மதியம் 12 மணிக்கு மீண்டும் அமுலாக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
பின்னர் குறித்த பகுதிகளில் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மதியம் 12 மணிக்கு மீள அமுலாக்கப்படவுள்ளது.
ஏனைய 17 மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று பி.ப 2 மணிக்கு மீள விதிக்கப்பட்டு வியாழன் (26) காலை 6மணிக்கு நீக்கப்பட்டு, மதியம் 12மணிக்கு மீள அமுலாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.