ஊழியர்களுக்கு பேருந்து சேவைபெற நிறுவனங்களுக்கு வாய்ப்பு: விண்ணப்ப விபரம் இதோ

அரச, அரை அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழில்புரியும் பணிக்குழாமினருக்கான போக்குவரத்து சேவைக்காக பேருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொவிட்-19 பரவலுக்கு மத்தியில், சுகாதார பாதுகாப்புடன் தங்களது பணியிடங்களுக்கு  பணிக்குழாமினரை ஏற்றிச்செல்வதற்காக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால், மாகாணங்களுக்கு இடையிலான பேருந்துகளை பயன்படுத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து சேவை அவசியான நிறுவனங்கள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் இணைதளத்திற்குள் பிரவேசித்து, விண்ணப்பத்திரத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்டட விண்ணப்பத்தை, இணையதளம் ஊடாகவோ அல்லது பின்வரும் முறைமைகளின் மூலமாகவோ அனுப்பிவைக்க முடியும்.

இணையதளம்                      –       www.ntc.gov.lk
மின்னஞ்சல்                            –      [email protected]
வட்ஸ்அப் இலக்கம்            –       0704361101
தொலைநகல்                        –       0112503725

இது தொடர்பான மேலதிக தகவல்களை 1955 என்ற உடனடி அழைப்பு இலக்கத்திற்கு தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

பேருந்து சேவையை வழங்க விரும்பும், செல்லுபடியாகும் மாகாணங்களுக்கு இடையிலான பயணிகள் சேவை அனுமதிப்பத்திரமுள்ள பேருந்துகளின் உரிமையாளர்கள், மேற்குறிப்பிட்ட இலக்கத்தை அழைத்து தங்களைப் பதிவுசெய்துகொள்ள முடியும் என்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435