ஊழியர் சேபலாப நிதியம் (EPF) குறித்து அவதானமாக இருப்போம்

ஊழியர் சேபலாப நிதியம் (நுPகு) குறித்து அவதானமாக இருப்போம்

கடந்த வருடத்தின் இறுதிப் பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக, நாட்டின் பொருளாதாரம் பெரும் தாக்கத்தை எதிர்கொண்டுள்ளது. நாட்டின் வெளிநாட்டுப் படுகடனை செலுத்துவதில் உள்ள இயலாமை மற்றும் அரசாங்கத்தை முன்னெடுப்பதில் உள்ள இயலாமை என்பனவற்றின் அடிப்படையில் இந்த விடயம் தீர்மானிக்கப்படுகிறது.

வெளிநாட்டு கடன்களை செலுத்தவேண்டியுள்ளதனால் 2019 முதல் 2022 வரையான காலப்பகுதி மிகவும் நெருக்கடி மிக்கதாக அமையும். இதனை சரியான முறைமையில் முகாமைத்துவம் செய்யாவிட்டால், கிறீஸைவிட பாரிய பாதிப்பை இலங்கை சந்திக்க நேரிடும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில், 2019ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தையோ, அல்லது இடைக்கால நிதி ஒதுக்கத்தையோ முன்வைக்க முடியாத நிலையில் அரசாங்கம் இருப்பமை அவதானிக்க முடிகிறது.

தற்போது உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட இலங்கைக்கு நிதி மற்றும் உதவிகளை (மீள செலுத்தாத உதவி) வழங்கும் நாடுகள் அனைத்தும் அவற்றை இடைநிறுத்தும் நிலைமை உருவாகிவருகிறது.

எவ்வாறிருப்பினும், தற்போது இலங்கையின் அரசியல் குழப்ப நிலைமை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வெளிநாட்டு படுகடன்களை செலுத்துவதற்காக அரச வங்கிகளின் ஊடாக கடன்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. இந்த ஆண்டுக்குள் 5 டொலர் பில்லியன் கடனை செலுத்த வேண்டிய நிலைமை இலங்கை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், ஊழியர் சேமலாப நிதியம் (EPF) குறித்து அதிக அவதானத்துடன் இருக்கவேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது. இது தெற்காசிய நாடுகளில் உள்ள மிகம் பாரிய சமூக நிதியமாகும். இதற்கு முன்னர் குறுகிய அரசியல் நோக்கத்தினால், ஊழியர் சேமலாப நிதியானது பல்வேறு முதலீடுகளுக்காக பயன்படுத்தப்பட்டது. அவை தோல்வியான முதலீடுகளாக அமைந்தன. இந்த நிலையில், எதிர்காலத்தில் ஊழியர் Nசுமலாப நிதியத்திற்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து பொருளாதார ஆய்வாளர்களும், தொழிற்சங்கத் தலைவர்கள் உட்பட இது குறித்து செயற்படும் தரப்பினர் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435