ஊழியர் சேம லாப நிதியத்திற்கேற்பட்ட நட்டம்

மத்திய வங்கி பிணை முறிப் பத்திர பரிமாற்றத்தினால் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு 14,900 மில்லியன் ரூபா நஸ்டம் ஏற்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (25) பாராளுமன்றத்தில் உரையாற்றிய வேளையே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

மோசடியாளர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தி, அந்த நஸ்டத்தை ஈடுசெய்வதற்கு பதிலாக, அவர்களை (மோசடியாளர்கள்) பாதுகாத்து, மோசடிகளை புறந்தள்ளி, பிணை முறி பரிமாற்றங்களை மறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அனுர குமார இதன்போது மேலும் கூறியுள்ளார்.

அத்துடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் பர்பச்சுவல் நிறுவனம் 23,000 கோடி ரூபாவுக்கு பிணை பத்திரங்களைக் கொள்வனவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இதனால் 14 மாதங்களுக்குள் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு 1490 கோடி ரூபா நஸ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், பிணை முறிப் பத்திரங்களை கொள்வனவு செய்யும் ஏனைய நிறுவனங்கள் 30 வீத வளர்ச்சியை அடைந்துள்ள நிலையில், பர்பச்சுவல் நிறுவனத்தின் சொத்து 1853 வீதமாக அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த காலப் பகுதியில் அந்த நிறுவனம் 13,000 மில்லியன் ரூபாவை இலாபமாக சம்பாதித்துள்ளது எனவும், இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அனுரகுமார திஸாநாயக்க மேலும் கூறியுள்ளார்.

நன்றி- தெரண-

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435