ஊழியர் தனிமைப்படுத்தல்குறித்த மனித உரிமை ஆணைக்குழு கவனம் செலுத்துமா?

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தை (FTZ) அண்மித்து பணியாற்றும் ஊழியர்கள் பாதுகாப்பற்ற முறையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு (HRCSL) கடந்த 16ஆம் திகதி அறியப்படுத்தப்பட்டுள்ளது.

ஊழியர்கள் தன்னிச்சையான சட்டவிரோதமான மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டமை மற்றும் குறைத்து மதிப்பிடப்பட்டமை என்பன அரசியலமைப்பின் 11, 12, (1), 12 (2), 13 (2), 14 (1), (14) முதலான சரத்துக்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அவர்களின் சுதந்திரத்தை வரையறைக்கு உட்படுத்துதல், ஊழியர்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு அவர்களை குறைத்து மதிப்பிடும் முறைமையில் கவனித்தல் என்பது தொடர்பான மிகப் பாரிய பிரச்சினைகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்துக்கு கொண்டு சென்று அது தொடர்பில் விசாரணை ஆரம்பிக்குமாறு இந்த முறைப்பாட்டின் மூலம் கோரப்பட்டுள்ளது.

கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் (NOCPCO) தலைவரான இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் குறித்த 98 ஊழியர்களையும் பொறுப்பேற்பதற்காக (இவர்களுக்கு எதிராகவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது) அனுப்பப்பட்ட இராணுவத்தினருக்கு எதிராக இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது

ஸ்டாண்டர்ட் அபி மூமண்ட் லங்கா (கட்டுநாயக்க) இன் அஸீலா தந்தெனிய (கட்டுநாயக்க) ஸ்ரீலங்கா தாபிது கூட்டமைப்பு (கட்டுநாயக்க) இன் சமிலா துஷாரி, மனித அபிவிருத்திக்கான புரட்சி அமைப்பு (RED) (கட்டுநாயக்க) இன் சந்ர தேவநாராயக மற்றும் அபிமானி கேந்திரம் (சீதுவ) இன் நொயெல் கிறிஸ்டின் பெர்ணான்டோ ஆகியோரினால் இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோவிட்-19 பரவல் கட்டுபாட்டு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் (NOCPCO) தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இந்த முறைப்பாட்டில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார். அவருடைய ஆலோசனையின்றி இராணுவ அதிகாரிகளால் இவ்வாறானதொரு நடவடிக்கை மேற்கொள்ள முடியாது என்றும் அந்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இந்த முறைப்பாட்டில் விசேடமாக, பெண் ஊழியருடன் செயற்பட்ட விதம் தொடர்பில் கவனம் எடுக்க வேண்டும் என்றும், அரசாங்கமும் இராணுவத்தினரும் இந்த நிலைமையை கையாண்ட விதம் மிகவும் பிரச்சனைக்குரியது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஊழியர்களை தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் சென்றபோது, அவர்களுக்கு தெளிவான தகவல்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை. அல்லது அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை. தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அவர்கள் பாதுகாப்பற்ற முறையில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சுகாதார முறைமையற்ற தனிமைப்படுத்தல் வசதிகள் மற்றும் சுகாதார முறைமையற்ற வசதிகள் வழங்கப்பட்டமை,

ஊழியர்களை பேருந்தில் ஏற்றுவதற்கு முன்னரும், தனிமைப்படுத்தல் மையங்களில் அனுமதிப்பதற்கு முன்னரும் PCR பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்காமை என்பன அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள கோவிட்-19 கட்டுப்பாடு ஒழுங்குவிதிகள் பின்பற்றப்படவில்லை என்பதை மிகத் தெளிவாக்கியுள்ளமை இதனூடாக தெரிவதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே,

01. குறித்த ஆடைத்தொழிற்சாலையின் 98 ஊழியர்களையும் சுற்றிவளைத்து கைதுசெய்து பேருந்துகளில் ஏற்றி சென்று வெளிப்படுத்ப்படாத இடங்களில் அவர்களை தடுத்து வைத்துள்ள இராணுவ அதிகாரிகளினால் அரசியலமைப்பின் 12 (1), 13 (1) மற்றும் 13 (2) ஆகிய சரத்துக்களையும்,

02. இந்த 98 ஊழியர்களையும் தடுத்து வைத்துள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் சட்டரீதியாக நிறுவப்பட்ட ஒன்றல்ல என்பதன் காரணமாக இந்த ஊழியர்களை அவ்வாறான மத்திய நிலையங்களில் தடுத்து வைத்திருப்பது சட்டரீதியாக நிறுவப்பட்டுள்ள ஏற்பாட்டு முறைகளுக்கு ஏற்புடையது அல்ல என்றும் நாங்கள் கூறுகின்றோம். எனவே அவர்களை வெளிப்படுத்தப்படாத மற்றும் சட்ட விரோதமான தனிமைப்படுத்தல் மையங்களில் தடுத்து வைத்திருக்கின்றமையானது அரசியலமைப்பின் 12 (1), 13 (2), 14 (1) (உ) முதலான சரத்துக்களையும்,

03. ஆண் இராணுவ அதிகாரிகள் பெண் ஊழியர்களின் தங்கும் இடங்களுக்குள் உள்நுழைந்தமை சட்ட விரோதமானது மற்றும் தன்னிச்சையான முறையில் கைது செய்து தடுத்து வைத்திருந்த வைத்திருக்கின்றமை நடைபெற்றுள்ளது. இது அரசியலமைப்பின் 12 (1) மற்றும் 13 (2) முதலான சரத்துக்களையும்,

04. இராணுவத்தினரால் ஊழியர்கள் உளவியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுதல், மனிதாபிமானமற்ற அல்லது குறைத்து மதிப்பிடல், தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் பலவீனமான சுகாதார நிபந்தனைகள், பரிசோதனைகள் முன்னெடுக்கப்படாமல், ஊழியர்களை ஒன்றாக வைத்திருத்தல் மற்றும் அதனூடாக ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதியாகும் நிலை ஏற்படுகின்றமை அரசியலமைப்பின் 11ஆவது சரத்தையும்,

05. இந்த 98 ஊழியர்களையும் வெளிப்படுத்தாமல் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து வெளியே செல்வது தடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எந்தவிதமான காரணங்களும் குறிப்பிடப்பட்டிருக்க வில்லை. இது அரசியலமைப்பின் 14 (1) (உ) சரத்தையும்,

06. இந்த 98 ஊழியர்களும் முறையற்ற விதத்தில் கவனிக்கப்பட்டுள்ளமை, அவரகள் தங்களுடைய அத்தியாவசிய பொருட்களை தயார் செய்வதற்கு சில நிமிடங்களே வழங்கப்பட்டுள்ளன. பேருந்துகளில் அதிகளவானவர்கள் ஏற்றப்பட்டுதுடன், பலவீனமான சுகாதார பாதுகாப்பு நிலைமையின் கீழ் வெளிப்படுத்தப்படாத இடங்களில் அவர்களை தங்கவைத்து, உண்பதற்கு உகந்த உணவுகள் வழங்கப்படாமை, எந்த விதமான மனிதத்தன்மையுடன் அவர்கள் கவனிக்கப்படவில்லை. ஊழியர்கள் என்றபடியால் அவர்களுடைய பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு அவர்கள் குறைத்து மதிப்பிடபபடும் வகையில் நடத்தப்பட்டமை முதலானவை அரசியலமைப்பின் 12 (2)ஆம் சரத்தையும்,

இவை அனைத்தும் பிரதிவாதிகளினால் மீறப்பட்டுள்ளமை காரணமாக குறித்த பணியாளர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என்பது இந்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச்செல்லும் முறைமையின்போது, இவ்வாறான சட்டவிரோத மற்றும் தன்னிச்சையான சுற்றிவளைப்பின்மூலம் தடுத்துவைத்தல் என்பன இடம்பெற்றுள்ளமையினால் அவர்கள் அனைவரும் கெரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த ஆடை தொழிற்சாலையை சேர்ந்த 98 ஊழியர்களின் சார்பிலும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இராணுவ அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கேரப்பட்டுள்ளது

மூலம் : விக்கல்ப

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435