வைத்தியர்களுக்கு போன்றே தம்முடைய பிள்ளைகளையும் பிரபல பாடசாலைகளில் சேர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்று கல்விச்சேவையில் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கல்வி சேவையில் உள்ள ஊழியர்களில் சலுகையை குறைத்து வைத்தியர்களில் பிள்ளைகளுக்கு மட்டும் அவ்வாய்ப்பை வழங்குவது கவலைக்குரிய விடயம் என்று கல்வி சாரா ஊழியர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அஜித் கே. திலககரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு தாம் கல்வியமைச்சரிடம் கோரியுள்ளதாக தெரிவித்த அவர், 3 வருட சேவையை பூர்த்தி செய்த ஊழியர்களின் பிள்ளைகளை பிரபல பாடசாலைகளில் இணைத்துக்கொள்ளுமாறு சுற்றுநிரூபம் வௌியிட்டிருந்த போதிலும் அது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வேலைத்தளம்/ அத தெரண