எட்காவை எதிர்த்து நாடு தழுவிய வேலைநிறுத்தம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

அரசாங்கம் இஷ்டத்திற்கு எட்கா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டால் அனைத்து தொழிற்சங்கங்களுடனும் இணைந்து நாட்டின் அனைத்து செயற்பாடுகளையும் ஆக்கிரமிப்போம் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எட்கா ஒப்பந்ததிற்கு எதிராக நாடு முழுவதும் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படின் அதற்கான பொறுப்பபை அரசாங்கம் ஏற்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ள அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் ஆசிரியர் டொக்டர் நளீன் டி சில்வா தெரிவித்தார்.

மீண்டும் எட்கா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற தகவல் வெளிவந்தததையடுத்தே தாம் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக மருத்துவர் மேலும் தெரிவித்தார்.

எட்கா ஒப்பந்தத்தை எதிர்த்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தற்போது பொது மனுவொன்றில் கையொப்பமிட்டு வருகிறது. அதற்கான கையொப்பங்கள் பெறப்பட்ட பின்னர் நடைபவனியாக சென்று ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளோம். கையொப்பமிடப்படவுள்ள வர்த்த ஒப்பந்தம் தொடர்பில் தேசிய கொள்கையொன்று மிகவும் அவசியம். தற்போது கையொப்பமிடப்படவுள்ள வர்த்தக கையொப்பங்களுக்கு அந்த சந்தர்ப்பத்தில் உள்ள சட்டமே தாக்கம் செலுத்தும்.

நாட்டின் சட்டதிட்டங்கள் மிகவும் பலவீனமாக உள்ளது. அதனை மாற்றம் செய்யும் போது அதற்கு முன்னர் கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு புதிய சட்டம் தாக்கம் செலுத்தாது. எனவேதான் தேசிய கொள்கையொன்று தற்போது அவசியமாகிறது என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435