எதிர்ப்பு போராட்டத்தில் தபால் ஊழியர்கள்

தொடர்ச்சியாக 8 நாட்கள் பணிப்பகிஷ்கரிப்பு ​போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள் இன்று (18) கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

ஏழு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த இம்மாதம் 3-5ம் திகதிகளில் நாடு முழுவதும் அடையாள வேலைநிறுத்தமொன்றை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்த தபால் அமைச்சர் இரு வார காலத்திற்குள் தீர்வு பெற்றுத்தருவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. எனினும் இதுவரை மேற்குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் தௌிவான தீர்மானம் இன்னும் கிடைக்கவில்லை என்று தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் எச்.கே.காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறு இருப்பினும் தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரையில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து இவ்வெதிர்ப்பு நடவடிக்கை தொடரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, தபால் தலைமையகம் அமைந்துள்ள கோட்டை டிஆர். விஜேவர்தன மாவத்தையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளமையினால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435