“எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தியை பார்த்து எனக்கு சிரிப்பு வந்தது. ஆனால் இதன் பின்னணியில் ஒரு பாரிய திட்டமிடல் இருப்பதாகவே தெளிவாக தெரிகிறது” – என்று வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள நேர்காணல் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கேள்வி: அமைச்சர் தினேஸ் குணவர்தனவுக்கும் கொரோனா என பேஸ்புக்கில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இதை பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றியது?
பதில் : எனக்கு சிரிப்பு வந்தது. ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு நாடு திரும்பிய மாத்திரத்தில்தான்
அந்த பொய்யான செய்தி இருந்தது. அன்றைய தினமும் நான் அலுவலகத்தில் பணியாற்றும் இருந்தேன்.
கேள்வி : அதை பார்த்ததும் உங்களுக்கு சிரிப்பு வந்ததா? கோபம் வந்ததா?
பதில் : எனக்கு சிரிப்பு வந்தது . ஆனால் இதன் பின்னணியில் ஒரு பாரிய திட்டமிடல் இருப்பதாகவே தெளிவாக தெரிகிறது என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
வேலைத்தளம்