என்ன ஆனாலும் சேவைக்கு திரும்பப்போவதில்லை- ரயில்வே ஊழியர்கள்

சேவையில் இருந்து நீக்கப்பட்டதாக கருதப்பட்டாலும் பணிப்புறக்கணிக்கை கைவிடப்போவதில்லை என்று ரயில்வே தொழிற்சங்க ஊழியர்கள் சங்கத்தின் ஒன்றியம் அறிவித்துள்ளது.

மூன்றாவது தினமாக இன்றும் (10) தொடரும் ரயில்வே ஊழியர் பணிப்பகிஷ்கரிப்பினால் ரயில்வே திணைக்களத்திற்கு 12 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் ​போக்குவரத்து சேவையை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதுடன் பணிக்கு சமூகமளிக்காதவர்கள் பணியில் இருந்து நீங்கி சென்றவர்களாகவும் கருதப்படுவர் என்று போக்குவரத்து அமைச்சு அறிவிருத்துள்ளபோதிலும் தொழிற்சங்கம் தமது பணிப்பகிஷ்கரிப்பில் உறுதியாக உள்ளது.

மேலும் இன்று காலை வரையில் 9 ஆக இருந்த ரயில் சேவை இன்று மாலை தொடக்கம் நான்காக குறைக்கப்படும் என்றும் தொழிற்சங்கம் அறவித்துள்ளது.

பொது மக்களின் வசதி கருதி விசேட பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அனுமதிபத்திரம் பெறாத பஸ்களும் அதிவேக பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்து புகையிரத நிலையங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435