அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அங்கத்தவர் ஒருவருக்கு எதிர்காலத்தில் தாக்குதல் எதுவும் இடம்பெற்றால் அதற்கான பொறுப்பை பாராளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன ஏற்றுகொள்ள வேண்டும் என்று சங்கத்தின் செயலாளர் மருத்துவர் நலிந்த ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் விடுத்த அச்சுருத்தல் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்யவுள்ளதாக நேற்று (02) கொழும்பில் நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் தெரிவித்த அவர், ஊடகத்தின் முன்பாக பாராளுமன்ற உறுப்பினர் நடந்துகொள்ளும் முறையினால் அவருடைய தந்தையான அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை மிகவும் அசௌகரியத்திற்கு உள்ளாவார் என்றும் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டுக்கு அனுப்பி கற்பித்து, அரசியலில் மகனை ஈடுபடுத்தி தந்தை மற்றொரு மர்வினையோ, எஸ்.பியையோ அல்லது ஹரீனையோ உருவாக்க எண்ணியிருக்க மாட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சராக இருந்த ஒருவர் அடுத்த கட்டமாக ஜனாதிபதியாக வருவதற்கு சிந்திப்பாரா அல்லது வீட்டுக்குச் செல்ல விரும்புவாரா என்று சுட்டிக்காட்டிய அவர் இதற்கு முதல் இருந்த சுகாதார அமைச்சருக்கு சுகாதார அமைச்சை நாசமாக்கும் மகன் இருக்கவில்லையென்றும் தெரிவித்தார்.
வேலைத்தளம்