ஐரோப்பாவில் வேலைவாய்பு- 62 இளைஞர்களை ஏமாற்றிய நபர் கைது

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அதுகோரளவின் பெயரை பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளில் வேலை பெற்றுத்தருவதாக 62 இளைஞர்களை ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஊடகப்பிரிவின் அதிகாரிகளினால் குறித்த நபர் கடந்த 19ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

குருணாகலை, புளுகல்ல வளவ்வ, புளுகல்ல என்ற முகவரியைச் சேர்ந்த 65 வயதான குறித்த நபர் மீரிகம பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினராகவும் தபால் நிலைய பொறுப்பதிகாரியாகவும் பணியாற்றியவர் ஆவார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைக்கும் ஐரோப்பிய நாடுகளின் வேலைவாய்ப்புக்கான ஒதுக்கீடு தனக்கு கிடைக்கும் என்று தெரிவித்துள்ள அந்நபர் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி ஒருவரிடம் 450,000 ரூபா பெற்றுக்கொண்டுள்ளார். ஆரம்பக்கட்டமாக 56,000 ரூபாவை தனது வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடு செல்ல விரும்புவர்கள் போன்று நாடகமாடிய பணியக விசேட விசாரணைக்குழுவினர் பணம் செலுத்த சென்ற இளைஞர் ஒருவருடன் சென்று கையும் களவுமாக குறித்த நபரை கைது செய்துள்ளனர். இதன் போது பல இளைஞர் யுவதிகளின் சுபவிபரக்கோவைகளும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435