ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டம் ஆரம்பம்

வறுமைக் ​கோட்டின் கீழுள்ள குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சம் பேருக்கு தொழில்வாய்ப்புக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.

முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 34,818 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நியமனம் பெறுபவர்கள் அவர்களுடைய நிபுணத்துவத்திற்கும் விருப்பத்திற்கும் அமைய அடையாளங்காணப்பட்ட 25 துறைகளில் 6 மாத பயிற்சி வழங்கப்படவுள்ளது.

தேசிய பயிற்சி மற்றும் தொழில்நுட்ப அதிகாரசபையின் நடத்தப்படவுள்ள இப்பயிற்சித் திட்டத்தில் பயிற்சிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்வோருக்கு NVQ 3ம் தர சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. பயிற்சிக் காலத்தில் 22,500 ரூபா மாதந்த கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சௌபாக்கியத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின் வறுமையற்ற இலங்கை என்ற தொனிப்பொருளின் கீழ் இந்நியமனங்கள் வழங்கப்படுகின்றன.

தெரிவு செய்யப்பட் அனைவரும் தனியார் அல்லது அரச நிறுவனங்களில் பணியாற்றாத குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் 6 மாத பயிற்சியின் பின்னர் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டு அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களில் சேவைக்கு அமர்த்தப்படாுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435