ஓய்வுபெற்ற அரச பணியாளர்களுக்கு ஜுலை மாதம் முதலாம் திகதியிலிருந்து வேதன உயர்வு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, 585,000 ஓய்வுபெற்ற அரச சேவையாளர்களுக்காக குறைந்தது 2,500 ரூபா முதல் 20,000 ரூபா வரையில் வேதனம் அதிகரிக்கப்படவுள்ளது.
2019 மார்ச் 5ஆம் திகதி முன்வைக்கப்பட்ட வரவு-செலவுத் திட்ட யோசனை மூலம் இந்த ஓய்வூதிய அதிகரிப்பிற்காக 12,000 மில்லியன் ரூபா அரசாங்கத்தினால் ஒதுக்கிடப்பட்டுள்ளது.
2017 ஜனவரி 01 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வூதியம் பெற்ற அரச பணியாளர்களின் வேதன பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக இந்த வேதன அதிகரிப்பு வழங்கப்படவுள்ளது.
இந்த வேதன அதிகரிப்பு தொடர்பான சுற்றறிக்கை கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட நிலையில், ஜுலை மாதம் முதல் அந்தக் கொடுப்பனவை வழங்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற அரச பணியாளர்களுக்கு கௌரவமளிக்கும் வகையில் 2019ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால், இந்த வேதன உயர்வு யோசனை முன்வைக்கப்பட்டது.
இதற்கமைய, 2017 ஜனவரி 01ஆம் திகதிக்கு முன்னர் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற அரச பணியாளர்களுக்கான வேதன அதிகரிப்பு கீழ்கண்டவாறு அமைகிறது.
பதவி |
வேதன குறியீடு |
தற்போதை ஓய்வூதியம் |
அதிகரிக்கும் கொடுப்பனவு |
அலுவலக உதவியாளர் |
PL |
21,080/- |
2,800/- |
பொலிஸ் சார்ஜண்ட் |
RS-2 |
25,971/- |
4,200/- |
முகாமைத்துவ உதவியாளர் தரம்-1 |
MN-2 |
29,157/- |
5,215/- |
தாதியர் சேவை தரம்-1 |
MT-7 |
35,421/- |
7,100/- |
ஆசிரியர் சேவை தரம்-1 |
GE-2 |
42,527/- |
9,200/- |
இலங்கை நிர்வாக சேவை தரம்-1 | SL-1 | 65,017/- |
16,000/- |
அமைச்சின் செயலாளர் |
SL-4 |
78,458/- |
20,000/- |
வழிமூலம்: லங்காதீப