பெருந்தோட்ட பாடசாலைகளில் பற்றாகுறையாக காணப்படும் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாணும் முகமாகவும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மீண்டும் இணைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பிரதமர் ரணில் விக்கரமசிங்கவின் எண்ணத்திற்கு அமைவாக தரம் உயர்த்தி அபிவிருத்திச் செய்யபட்டுவரும் 25 பாடசாலைகளில் காணப்படும் கணிதம், விஞ்ஞானம், ஆங்கில ஆசிரியர் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் முகமாகவும் ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்டையில் மீண்டும் மலைய தோட்ட பாடசாலைகளுக்கு மாத்திரம் இணைந்துக்கொள்ள அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
இந்த ஆசிரியர்களை மாகாண சபைகளின் ஊடாக தெரிவுசெய்வதற்கான சுற்று நிருபத்ததை கல்வி அமைச்சு மாகாண சபைகளுக்கு அனுப்பி உள்ளதாகவும். இலங்கையில் எந்தவொரு பகுதியிலும் இருந்து கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் கற்பிக்க கூடிய ஓய்வுபெற்ற பட்டதாரிகள் மாகாண சபை ஊடாக இதற்கு விண்ணபிக்கலாம் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஹட்டன் கல்வி வலையத்திற்கு உட்பட்ட பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் இல 02 தமிழ் வித்தியாலயத்தின் வெள்ளி விழா கொணட்டாடம் ஹட்டன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடந்து உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர், எனது அமைச்சு குறிப்பாக இலங்கையில் காணப்படும் அனைத்து தமிழ்மொழி மூலமான பாடசாலைகளின் அபிவிருத்திக்கு பொருப்பானதாகக் காணப்படுகின்றது.
எனக்கு இந்த அரசாங்கம் கொடுத்த அமைச்சசை முறையாகச் செயற்படுத்துவதினாலயே மலையகத்தின்பால் நான் முன் வைக்கும் நல்ல பல விடயங்களுக்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைகின்றது. அதில் ஒன்றே இந்த மலையத்திற்கான கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் பாடங்களுக்கான ஓய்வுபெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் என்று தெரிவித்துள்ளார்.