ஓய்வூதியம் நிறுத்தப்பட்டமைக்கு எதிராக ஒன்றிணையும் தொழிற்சங்கங்கள்

2016ம் ஆண்டு தொடக்கம் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை புதிய அரசாங்கம் இல்லாமல் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 19ம் திகதி எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொதுச்சேவை தொழிற்சங்க கூட்டணி அறிவித்துள்ளது.

எதிர்வரும் 19ம் திகதி நிர்வாக அமைச்சின் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகவும் அதற்கு சாதகமான பதில் கிடைக்காத பட்சத்தில் அனைத்து தொழிற்சங்கங்களினதும் ஆதரவுடன் போராட்டம் தொடரும் என்றும் அச்சங்கம் எச்சரித்துள்ளது.

அரச ஊழியர்களுக்கு அவர்களுடைய ஓய்வூதியத்தை தவிர வேறு வருமானங்கள் இல்லை. இது தொடர்பில் நாம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு தெரிவித்துள்ளோம்.

அரச ஊழியர்களின் விதவை மனைவியரையும் தபுதாரக் கனவனையும் தொழில்புரிந்த இடத்திற்கு சென்று நிதிய தகவல்களை பெற்று வரக்கூறுவது கேலிக்குரியது. மேலும் ஓய்வு பெற்றவர்களுக்கு பெறும் சிரமத்தை கொடுக்கும் செயலாகும். அத்தகவல்களை ஓரிடத்தில் சேகரித்து வைத்துக்கொள்வது ஓய்வூதியத் திணைக்களத்தின் பொறுப்பாகும் என்று ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கூட்டணி தெரிவித்தது.

இவ்வூடகவியலாளர் சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின், அகில இலங்கை முகாமைத்துவ உதவியாளர் சங்கத்தின் சார்பில் உதேனி திஸாநாயக்க, ஒன்றிணைந்த தபால் சங்கங்களின் முன்னணி சார்பில் சிந்தக்க பண்டார, தபால் மற்றும் தொலைதொடர்பு ஊழியர் சங்கம் சார்பில் ஹெட்டியாராய்ச்சி, மற்றும் ஓய்வு பெற்றோர் சங்க அங்கத்தவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435