கடமைகள் பொறுப்பேற்காவிட்டால் வேதனம் கிடையாது

மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தினால் நியமனம் வழங்கப்பட்டு இதுவரையில் தத்தமது பாடசாலைகளில் கடமைகளை பொறுப்பேற்காத பட்டதாரி ஆசிரியர்கள் இன்னும் இரு வார காலத்திற்குள் கடமையை பொறுப்பேற்குமாறு மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்னும் கடமையை பொறுப்பேற்காத பட்டதாரி ஆசிரியர்கள் தமக்கு வசதியான பாடசாலைகளில் நியமனங்களை பெற்றுக்கொள்வதற்காக அரசியல்வாதிகள் பின்னால் அழைந்துக்கொண்டிருப்பது தெரியவந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், கஷ்ட பிரதேசம் என்பதற்காக எந்த பாடசாலைகளையும் புறக்கணிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

கஷ்டப்பிரதேசங்களில் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தினமும் கல்வித் திணைக்களத்திற்கு வருகைத் தந்து தமக்கு வசதியான பாடசாலைகளில் நியமனங்களை மாற்றியமைத்துக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூலை மாதம் 6ம் திகதி 742 தமிழ் மற்றும் முஸ்லிம் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது. கஷ்டப் பிரதேசம் என்பதற்காக புறக்கணிக்க முடியாது. கடமையை பொறுப்பேற்காவிட்டால் வேதனம் வழங்கப்பட மாட்டாது. புதிய நியமனம் பெற்றவர்கள் எத்தகைய கஷ்டப்பிரதேசமாயினும் தமது கடமைகளை பொறுப்பேற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பிரதேசங்களில் பாடசாலைகளின் நலன்கருதியே இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435