கடினமான வினாத்தாள் – பரீட்சை எழுதாத வடமேல் பட்டதாரிகள்

வட மேல் மாகாண பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்காக கடந்த ஜூலை மாதம் 30ம் திகதி நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் சிலர் பரீட்சார்த்திகள் பகுதி 11 வினாத்தாளை எழுதாமல் சென்றுள்ளனர்.

வழங்கப்பட்டிருந்த ஒரு மணித்தியாலத்திற்குள் முதற்பகுதி வினாத்தாளை பூர்த்தி செய்ய முடியாமல் மிகவும் கடினமாக இருந்தமையினால் புள்ளிகள் பெற்றுக்கொள்ள முடியாது என்று தீர்மானித்த பட்டதாரிகள் பகுதி 2 இற்கு நேரத்தை விரயம் செய்வது பயனற்றது என்று கூறியே இரண்டாம் பகுதியை வினாத்தாளை பூர்த்தி செய்யாமல் வெளியேறியுள்ளனர்.

இம்முறை போட்டிப்பரீட்சை தோல்வியடைந்துள்ளது. பல பாடத்துறைகளுக்கு ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்காகவே விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அந்தந்த விடயம் சார் கேள்விகளடங்கிய வினாத்தாளை விண்ணப்பதாரிகளுக்கு கொடுக்கப்பட்டிருந்தால் இந்நிலை ஏற்படாது. துறைசார் விசேட பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களும் பரீட்சையில் தோற்றியிருந்தனர். அவர்களுக்கு போட்டிப்பரீட்சையின்றி நியமனம் வழங்கியிருந்தால் நியாயமானது.

பட்டதாரிகளை மீண்டும் மீண்டும் வீழ்த்தக்கூடிய வகையில் எந்த அடிப்படையுமே இல்லாமல் இந்த போட்டிப்பரீட்சை நடத்தப்படும் முறையை ரத்து செய்து துறைசார் வினாத்தாள்களை வழங்கி போட்டிப்பரீட்சை நடத்தப்படவேண்டும் என்றே நாம் கோருகிறோம் என்றும் சில பரீட்சார்த்திகள் தெரிவித்திருந்தனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435