கடையடைப்பு போராட்டம் வாபஸ்

வற் வரி அதிகரித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (9) நாடு முழுவதும் நடத்தப்படவிருந்த கடையடைப்பு போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று அகில இலங்கை வர்த்தகர் சங்க கூட்டுக்குழு தெரிவித்துள்ளது.

நேற்று (08) பொலன்னறுவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலையடுத்து இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என்று கூட்டுக்குழு தெரிவித்துள்ளது.

மாற்றம் செய்யப்பட்ட வற்வரி தொடர்பான முன்மொழிவு இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படாது என்றும் எதிர்வரும் மூன்று வார காலத்துக்குள் அவசியமான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு புதிய வரி முறை அதிகரிக்கப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார் என்று கூட்டுக்குழு பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெறுமதி சேர்க்கப்பட்ட வற் வரி அதிகரிப்பானது ஜனாநாயக முறையில் நடத்தப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்- அத தெரண

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435