கட்டாய சேவைக்காலத்தை பூர்த்தி செய்யாதோருக்கு மீண்டும் இடமாற்றம்

முதல் நியமனம் பெற்ற பாடசாலைகளில் கட்டாய சேவைக்காலத்தை பூர்த்தி செய்யாது இடமாற்றம் பெற்று வேறு பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய பாடசாலைகளுக்கே மாற்றல் வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.டி.ஏ. நிஸாம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு இடமாற்றசபையின் தீர்மானத்திற்கமைய கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் இவ்விடமாற்றங்களை வழங்கியுள்ளது என்று மாகாண கல்விப் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதல் நியமனம் பெற்ற பாடசாலைகளில் ஐந்து வருட சேவைக்காலத்தை நிறைவு செய்யவேண்டும் என்பது நிபந்தனையாகும். எனினும் சில ஆசிரியர்கள் செல்வாக்குகள், அரசியல் அழுத்தங்களை பயன்படுத்தி குறித்த பாடசாலைகளில் இருந்த இரண்டு மூன்று வருடங்களில் சொந்த இடங்களில் உள்ள பாடசாலைகளுக்க இடமாற்றம் பெற்றுக்கொள்கின்றனர்.

கிண்ணியா, மூதூர், மட்டக்களப்பு மத்தி வலயம் ஆகியவற்றில் பணியாற்றிய அம்பாறை மாவட்ட ஆசிரியர்களே இவ்வாறு இடமாற்றம் பெற்று சென்றுள்ளனர்.

இவ்விடமாற்றத்தால், கல்முனை, சம்மாந்துறை ஆகிய கல்வி வலய பாடசாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர்கள் விசனம் தெரிவித்துள்ள நிலையிலேயே இவ்விடமாற்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாய்ந்தமருது பாடசாலையில் இவ்வாறு 12 ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுள்ளதுடன் 3 ஆசிரியர்களுக்கு மாத்திரம் பதிலீட்டு ஆசிரியர்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி – தினகரன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435