கட்டார் சர்வதேச விமானநிலையத்தில் சேவைக்கட்டணமாக 10 டொலர் அறவீடு

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் கட்டார் ஹமாட் சர்வ​தேச விமானநிலையத்தில் இருந்து பயணிக்கும் பயணிகளிடமிருந்து 35 கட்டார் ரியால் (10 டொலர்) சேவைக்கட்டணமாக அறவிடப்படும் என்று கட்டார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையங்களுக்கு மேலதிகமாக டிக்கட் விநியோகிக்கும் முகவர் நிலையங்களிடமிருந்த இத்தொகை அறவிடப்படும் என்றும் அதற்கான வரிக்கட்டணத்தை பயணியின் டிக்கட் பெறுமதியுடன் இணைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்டார் எயார்வேஸ் தெரிவித்துள்ளது. அதாவது QR 1000 என்றால் வரியுடன் புதிய கட்டணம்- QR 1000 + QR 35 = QR 1,035 ஆகும்.

ஓகஸ்ட் மாதம் 30ம் திகதி தொடக்கம் ஹமாட் சர்வதேச விமான நிலையத்தில் இவ்வரி அதிகரிப்பை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பாக டிக்கட் விநியோகிக்கும் முகவர் நிலையத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்படவுள்ளதுடன் அதனூடாக புதிய வரித்தொகையை அறவிடுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கட்டார் எயார்வேஸ் தெரிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் எத்தனை மணிக்கு பயணிக்கும் பயணியாக இருந்தாலும் இக்கட்டணம் அறவிடப்படும். இரண்டு வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு இக்கட்டணம் செல்லுபடியாகாது.

பயணிக்கான சிறந்த சேவையை வழங்குவதற்காக இக்கட்டணம் அறிவிடப்படவுள்ளதாக கட்டார் எயார்வேஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435