கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்புத்துறை பிரதானிக்கு எதிர்ப்பு தெரிவித்து, விமான நிலைய பாதுகாப்புத் துறை பணியாளர்கள் இன்று (22) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதுகாப்புத்துறை பிரதானியின் தன்னிச்சையான முறையில் இடமாற்றங்களை வழங்குகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை சுதந்திர பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.டபிள்யு.பீ.முஹந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவன அதிகாரிகளுக்கும் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதன்போது, குறித்த இடமாற்றங்களை இரத்தச் செய்வதாக அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதியை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டதாக விமான நிலையத்தின் இலங்கை சுதந்திர பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.