இலங்கை கணக்காளர் சேவையில் தரம் III இற்கு ஆட்களை இணைத்துக் கொள்வதற்கான வரையறுக்கப்பட்ட / பகிரங்க பரீட்சை – 2017 / 2018 (2020) கொழும்பு மாவட்டத்தில் 60 மத்திய நிலையங்களில் எதிர்வரும் 16 ஆம் 22 ஆம் மற்றும் 23 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இந்த பரீட்சார்திகளின் பரீட்சை அனுமதி அட்டை தற்பொழுது தபாலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இதுவரையில் பரீட்சை அனுமதி அட்டை கிடைக்கப்பெறாதோர் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தி www.slexams.com என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பி.சனத்பூஜித்த விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைக்கு சமூகமளிப்பதற்கு முன்னர் நேரகாலத்துடன் பரீட்சை அனுமதி அட்டையை பரிசோதித்து ஏதேனும் மற்றங்கள் இருக்குமாயின் அவற்றை உடனடியாக இலங்கை பரீட்சை திணைக்களத்தின் நிறுவன மற்றும் வெளிநாட்டு பரீட்சை கிளையுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இதற்கான தொலைபேசி இலக்கங்கள் பின்வருமாறு: 1911 , 0112786150 / 0112785290
பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன்னர் அனைத்து பரீட்சார்திகளும் 2019.08.16 திகதி அன்று வெளியான வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான சட்ட மற்றும் ஆலோசனைகளை தெளிவாக வாசித்து புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம்