கணக்காளர் சேவை தரம் iii போட்டிப்பரீட்சை

இலங்கை கணக்காளர் சேவையின் தரம் 3 இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திறந்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று (04) வௌியான வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.

திறந்த போட்டிப் பரீட்சை மூலம் 116 பேரும் மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை மூலம் 82 பேரும் தெரிவு செய்யப்பட உள்ளனர் எனவும் ஒவ்வொரு பாடத்திற்கும் எழுத்துப்பரீட்சையினூடாக 40 வீத புள்ளிகள் வழங்கப்படவுள்ளதுடன் மிகுதி செயன்முறை மற்றும் நேர்முகத்தேர்வு என்பவற்றினூடாக வழங்கப்படவுள்ளது என்று நிருவாகம், முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி அறிவித்துள்ளார்.

கணக்கியல் வர்த்தகப் பட்டதாரிகள் குறித்த துறையில் உயர் டிப்ளோமா பெற்ற 22-28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு 5 வருடங்களுக்கு குறையாத சேவைக்காலமுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி டிசம்பர் மாதம் 05ஆம் திகதியாகும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435