கந்தக்காட்டில் புதிதாக 196 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து மேலும் 196 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று (09) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். குறித்த நிலையத்தில் நேற்று 56 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் இதுவரை கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 252 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின எண்ணிக்கை 2350 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1979 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது, 360 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435