கரும்பு உற்பத்தியாளர் பிரச்சினை தொடர்பில் உயர்மட்ட பேச்சு

கரும்பு உற்பத்தியாளர்களின் நலன்களுக்குக் குந்தகமாக கல்லோயா பிளான்டேசன் கம்பனி செயற்படுவதற்கு தாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்ட கரும்பு உற்பத்தியாளர்கள் நீண்டகாலமாக தமது தொழிலில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நேற்று (28) மீண்டும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தலைமையில் நிதியமைச்சில் இடம்பெற்ற கூட்டத்தில் ஆராயப்பட்ட போதே அவர்கள் இவ்வாறு உறுதியளித்தனர்.

கல்லோயா பிளாண்டேசன் நிறுவனத்தின் நடவடிக்கைகளை ஆதரிக்கமுடியாதெனவும், இந்த நிறுவனம் கரும்பு உற்பத்தியாளர்களை நசுக்கி தாங்கள் மட்டும் பயன்பெறுவதைக் கைவிட்டு அவரகளின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். கடந்த காலங்களில் உற்பத்தியாளர்களுக்கு பாரிய வட்டி விகிதத்தில் கடனை வழங்கி அவர்களின் வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களை ஏற்படுத்தியுள்ள இந்த நிறுவனம் இந்தக் கடன் சுமையை குறைக்கும் வகையிலான அவசரத் தீர்வுகளை மேற்கொள்வது மிகவும் அவசியம் என்று இதன் போது அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கருத்து வௌியிட்டார்.

கரும்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினை தொடர்பில் தீர்வுகாணாமல் இழுத்தடிப்பு செய்வதை விடுத்து தொழிலாளர்களுக்கு நன்மைபயக்கும் வகையிலான தீர்வொன்றை கல்லோயா பிளான்டேசன் உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், சீனியின் கொள்வனவு விலையை அதிகரித்து கரும்பு உற்பத்தியாளர்களுக்கு இலாபமீட்டும் வகையிலான திட்டங்கள் தொடர்பிலும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் தயாகமகே மற்றும் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், ஹிங்குரானை சீனித்தொழிற்சாலையை தற்போது நிர்வகித்து வரும் கல்லோயா பிளான்டேசன் கம்பனியின் பணிப்பாளர் நாயகம் மற்றும் திறைசேரி உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் புதன்கிழமை (03) மீண்டுமொரு அமைச்சர்கள் மட்டதிலான கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்த நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, எதிர்வரும் திங்கட்கிழமை (01) கல்லோயா பிளாண்டேசன் நிறுவனம் தமது நடவடிக்கைகள் தொடர்பான இறுதியறிக்கை ஒன்றை சமர்பிக்க வேண்டுமென நிறுவன அதிகாரிகளிடம் பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435