கல்விசார பணியாளர்களுக்கும் ஏனைய அரச துறையினருக்குமான வேதன வேறுபாடு

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேதனம் அதிகரிக்கப்பட்ட முறைமை மற்றும் அதன் தற்போதைய நிலைமைகள்; குறித்து உயர்கல்வி இராஜாங்க அமைச்சர மொஹான்லால் கிரேரு விளக்கமளிக்கிறார்.

2011 இல் பதவி வேறுபாடின்றி கல்விசார் பணியாளர்கள் குழுவுக்கு ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கு 25 வீத கற்றல் கொடுப்பனவு வழங்கப்பட்டது.

2011ஆம் ஆண்டின் பின்னர் இது தொடர்ச்சியாக அதிகரித்தது. இது ஒரு முறைமை இன்றி நடைபெற்றது.

2017 ஜுன் 7ஆம் திகதிக்கு திகதியிடப்பட்ட முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் கடிதத்துக்கு அமைய,

கல்விப் பணியாளர்கள் குழாமின் பயிற்சி விரிவுரையாளர்களுக்கு 100க்கு 115 என்ற வீதத்திலும், சிரேஸ்ட விரிவுரையாளர்களுக்கு 100க்கு 177 வீதத்திலும் வேதனம் அதிகரிக்கப்பட்டது. தற்போதும் அவ்வாறே உள்ளது. கல்விசார் பணியாளர்கள் முன்னெடுத்த போராட்டத்தின் விளைவாக இந்த வேதன அதிகரிப்பு இடம்பெற்றது.

எனினும், இந்த வேதன உயர்வு, உயர்கல்வித் துறையைச் சேர்ந்த அனைத்து தரப்பினருக்கும் இடம்பெறவில்லை. அதுதான் அடிப்படை குறைப்பாடாக அமைந்தது.

இந்த நிலையிலேயே கல்விசார ஊழியர்களும் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
எனினும், 2015 ஜனவரி 5ஆம் திகதி நிதி அமைச்சின் கடிதம் ஒன்றின் ஊடாக கல்விசார மற்றும் கல்விசார் உதவியாளர்களுகள் குழாமுக்கு 100க்கு 20 வீத கொடுப்பனவு ஒன்று 2015 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டது.

இந்தக் கொடுப்பனவை மேலும் அதிகரிக்க 2016 இல் கல்விசாரா பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, 2016 ஓகஸ்ட் 8ஆம் திகதி ஏற்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய 100க்கு 15 வீத கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டு, 100க்கு 35வீதமாக அந்தக் கொடுப்பனவு கல்விசார பணியாளர்களுக்கு அதிகரிக்கப்பட்டது.

அடுத்துவரும் 5 ஆண்டுகளில் பொது கட்டமைப்பு ஒன்றின் அடிப்படையில், பல்கலைக்கழக ஊழியர்கள் தொடர்பில் நிதி அமைச்சுடன் இணைந்து செயற்படவும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.

எனினும், குறித்த இணக்கப்பாட்டில் நிதி அமைச்சில் பங்கெடுக்காத காரணத்தால், நிதி அமைச்சு தொடர்ச்சியாக இதற்கமைய செயற்படுவதை புறகக்கணித்தது. இதற்கான தர்க்கத்தில் நியாயமும் உள்ளது.

2014 டிசம்பர் 31 ஆம் திகத கல்விசார ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட வேதனம் கடந்த மூன்று ஆண்டுகளில் 100க்கு 52, 53 வீதங்களில் அதிகரித்துள்ளது. இது அரச துறையில் நியாயமற்ற முறையிலான வேதன உயர்வாக அமைந்துள்ளது.

அலுவலக உதவியாளர்களின் வேதனம்

அரச காரியாலயங்களில் பணிபுரியும் அலுவலக உதவியாளர்களின் மாதந்த வேதனம் 32, 040 ரூபாவாகும். அரச கூட்டுத்தபானங்கள் மற்றும் ஏனைய காரியாலயங்களில் பணிபுரியும் ஊழியர்களின் மாதாந்த வேதனம் 32, 270 ரூபாவாகும்.

எனினும், பல்கலைகழக அலுவலக உதவியாளருக்கு தற்போது 42, 605 ரூபா மாதாந்த வேதனம் வழங்கப்படுகிறது. மேற்குறித்த தரப்பினரையும்விட 10,000 ரூபா அதிக வேதனமாகும்.

அரச திணைக்கள சாரதிகளின் வேதனம்

அரசாங்க அமைச்சுக்களின் திணைக்;களங்களைச் சேர்ந்த சாரதிகளுக்கு 32, 891 மற்றும் அரசாங்க கூட்டத்தாபனங்களில் 33,121 ரூபாவாகவும் உள்ளது. எனினும், கல்விசார பணியாளர்களுக்கு 45,187 வேதனம் உள்ளது. இங்கு 12,000 ரூபா வேதன அதிகரிப்பு காணப்படுகிறது.

முகாமைத்துவ உதவியாளர்களின் வேதனம்

அரசாங்க அமைச்சுக்களைச் சேர்ந்த முகாமைத்துவ உதவியாளர்களுக்கு 34,639 ரூபா. அரசாங்க கூட்டுத்தாபனங்களில் 35,884 ரூபாவாககும். எனினும், பல்கலைக்கழக கல்விசார பணியாளர்களுக்கும், கல்வி உதவியாளர்களுக்கும் 47, 922 ரூபா, இங்கும் 10,000 ரூபா வேதன அதிகரிப்பு உள்ளது.

உதவிப் பதிவாளர்

அமைச்சுக்களின் உதவிப் பதிவாளர்களுக்கு 48,543 ரூபா. அரச கூட்டுத்தாபனங்களில் 52,961 ரூபா மாதாந்த வேதனம். பல்கலைக்கழக துறையில் 63, 335 ரூபா மாதாந்த வேதனம். அரச நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இங்கு 15,000 ரூபா வேதன அதிகரிப்பு காணப்படுகிறது.

இவ்வாறான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, இந்த விடயத்தில் தர்க்கம் ஒன்று ஏற்படுகிறது.
இந்த அசாதாரணமற்ற வேதன உயர்வானது அரசாங்கத்துறைகளின் ஏனைய துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சம்பள நிர்ணய சபை மற்றும் நிதி அமைச்சின் தர்க்கமாக உள்ளது.

இந்த நிலையில்;, கல்விசார பணியார்களுக்கு வழங்கப்பட்ட இணக்கப்பாட்டில் 100க்கு 85வீதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், வேதன அதிகரிப்பு, மற்றும் இழப்பீடு கொடுப்பனவு என்பனவற்றிலே பிரச்சினை உள்ளதாகவும் உயர் கல்வி பிரதி அமைச்சர் குறிப்பிடுகிறார்.

எனினும், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தமது தலையீட்டுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் 100க்கு 5வீதமாக இருந்த அதிகரிப்பை 8வீதமாக உயர்த்த இணங்கப்பட்டது.

100க்கு 1வீத அதிகரிப்பை மேற்கொள்ள வருடம் ஒன்றுக்கு 47 மில்லியன் ரூபா அவசியமாகும். அப்படியாயின் 5வீத அதிகரிப்புக்கு 235 மில்லியன் ரூபா அவசியமாகிறது. 100க்கு 10வீத மாக அதிகரிக்க முயற்யித்தால் இதுபோல இரு மடங்கு நிதி அவசியமாகும்.

இந்த நிலையில், பேச்சுவார்த்தையின்போது அவர்கள் (கல்விசாரா பணியாளர்கள்) 100க்கு 30வீத அதிகரிப்பை கோரினர். உயர் கல்வி பிரதி அமைச்சர் குறிப்பிடுகிறார். பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமைகக்கு இதுதான் காரணமாகும். இது பாரியளவான அதிகரிப்பாகும்.

பின்னர் அவர்கள் 100க்கு 20வீதமாக அதை குறைத்து, தற்போது 100க்கு 15வீதம் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் உள்ளனர்.

எனினும், எம்மால் முடிந்தளவான மட்டத்துக்கு நாம் சென்றுள்ளோம் என உயர் கல்வி பிரதி அமைச்சர் குறிப்பிடுகிறார்.

இந்த பணிப்புறக்கணிப்பின் காரணமாக, பல்கலைக்கழகங்கள் தொடர்ச்சியாக மூடப்படுவதனால், நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய பாதிப்பு ஏற்படும். அத்துடன், மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, உரிமைகள் தொடர்பில் போராடுவதுடன், தமது கடமைகளை நிறைவேற்றுவதும் அவசியமாகும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மெஹான்லால் கிரேரு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களிடம் கோரியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435