கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல்: ஜனாதிபதியை தலையிடுமாறு கோரிக்கை

அரசியல் பழிவாங்களுக்காக கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் முறையற்ற செயற்பாடுகளை நிறுத்துமாரு கோரி கல்வியை பாதுகாப்பதற்கான தொழிற்சங்க ஒன்றியம் நேற்று புதன்கிழமை (04) கல்வி அமைச்சுக்கு முன்னதாக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.

இலங்கை கல்வி நிர்வாக அதிகாரிகள் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம் என்பன உள்ளிட்ட 11 சங்கங்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டிருந்தன.

தற்போது எமது நாட்டில் அரசியல் பழிவாங்களுக்காக கல்வித் துறைக்கு பொறுத்தமற்ற தகுதியற்றவர்களுக்கு நியமனங்கள் இ முறையற்ற இடமாற்றங்கள் உள்ளிட்ட விடயங்கள் இடம்பெறுவதாக ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயளாலர் ஜோசப்ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இப்பிரச்சினை தொடர்பாக சில ஆசிரிய சங்கங்கள் பிரதமர் ரணில்விக்ரமசிங்க மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாவிடமும் பேச்சுவார்ததை நடத்தின.

எனினும் அது வெற்றியளிக்கவில்லை. எனவே தான் நாம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அரசியல் பழிவாங்களுக்காக வழங்கப்படும் பொறுத்தமற்ற நியமனங்கள் காரணமாக இன்றை மாணவர்களும் எதிர்கால சந்ததியினருமே பாதிக்கப்படுகின்றனர்.
எனவே கல்வி அறிவ மிக்க எதிர்கால சந்ததியினரை உருவாக்க வேண்டுமாயின் இவ்வாறான விடயங்களை அரசாங்கம் முற்றாக நீக்க வேண்டும்.

இது குறித்து நாம் பிரதமர் ரணில்விக்ரமசிங்கவிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் கோரிக்கை விடுக்கின்றோம்.
அனைத்து மக்கள் பிரதிநிதி என்ற வகையில் ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும்.
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கல்விதுறையில் பாரிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறிக்கொண்டிருக்கின்றார்.

அதிபர்களையும் ஆசிரியர்களையும் ஏனைய கல்வித் துறை அதிகாரிகளையும் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது தான் நல்லாட்சி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி.
எவ்வாறிருப்பினும் இவ்வாறான தொடர்ச்சியான முறையற்ற செய்றபாடுகளுக்கு இனியூம் நாம் இடமளிக்கப்போவதில்லை. எனவே விரைவில் இதற்கான தீர்வூகள் வழங்கப்படாவிட்டால் இதனை விடவும் பாரிய போராட்டத்தினை முன்னெடுக்க தயாராகவுள்ளோம் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்;தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்றைய தினம் மலையகத்தின் பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் வழமையாக இடம்பெற்றுள்ளது.
எனினும் சில பாடசாலைகளில் மாணவர்கள் வருகை தந்திருந்தும் ஆசிரியர்கள் வருகை தராமையால் பாடசாலை நடவடிக்கைகள் இடம்பெறவில்லை.

கல்வி நிர்வாக சேவையின் அதிகாரிகள் , அதிபர்கள் , ஆசிரியர் சேவைக்குட்பட்ட அதிகாரிகள் நேற்று முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முழுமையாக தோல்வியடைந்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அனைத்து பாடசாலைகளும் நேற்று வழமைபோல் செயற்பட்டன.

அதிகாரிகளின் அழுத்தத்தின் காரணமாக சில இடங்களில் ஆசிரியர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே சமுகமளித்திருந்தனர்.
இருப்பினும் பாடசாலை மாணவர்களின் வருகை அல்லது ஆசிரியர்களின் வருகை குறைவாக காணப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435