இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை ஆசிரியர் கல்விச் சேவை மற்றும் இலங்கை அதிபர் சேவை என்பவற்றைச் சார்ந்த அதிகாரிகள் ஓய்வு பெறுவதற்கான அனுமதியை வழங்கும் அதிகாரத்தை இலங்கை அரச சேவை அதிகாரசபை கல்வியமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளது.
அனைத்து ஆவனங்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட ஓய்வு பெறுவதற்கான விண்ணப்பங்கள் கூட இன்னமும் நிலுவையில் உள்ள நிலை மற்றும் இதனால் ஓய்வுக்காக விண்ணப்பித்த அதிகாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினை என்பவை தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் கல்வியமைச்சின் செயலாளருக்கு முறைப்பாடு செய்ததையடுத்து கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் ஆலோசனைக்கமைய கல்வியமைச்சு பொறுப்பை தமக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது. இதனயைடுத்தே அதிகாரசபை குறித்த பொறுப்பை கல்வியமைச்சிடம் வழங்கியுள்ளது.
ஒழுக்காற்று மற்றும் வேறு பிரச்சினைகளுடன் தொடர்புபட்ட அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அதிகாரிகளுக்கு சாதாரண முறையின் கீழ் குறித்த திகதியில் ஓய்வுகான அனுமதி வழங்குவதற்கான அதிகாரம் மட்டும் அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஓய்வை எதிர்பார்க்கும் அதிகாரிகள் ஆறுமாதங்களுக்கு முன்பாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை கையளிக்கவேண்டும். இதனூடாக சுமார் 22 000 அதிகாரிகள் உரிய தினத்தில் ஓய்வை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை பெறுவர் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களுல் தேசிய பாடசாலை ஆசிரியர்கள், மாகாண பாடாசலை ஆசிரியர்கள் தமது ஓய்வுக்கான விண்ணப்பத்தை மாகாண கல்வி காரியாலயத்தில் கையளிக்க முடியும். பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் மாகாண கல்விக்காரியாலயத்திடம் கைளியளிக்கும் நிலையில் தாமதமின்றி உரிய தினத்தில் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்று அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
வேலைத்தளம்