
கல்வியியல் கல்லூரிகளில் கற்கும் மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் அடுத்த வருடம் முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக கல்வியியல் கல்லூரிகளுக்கான பிரதம ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார்.
இதுவரை 3, 500 ரூபாவாக வழங்கப்பட்ட கொடுப்பனவுடன் மேலும் 500 ரூபா சேர்க்கப்பட்டு மொத்தமாக 4000.00 ரூபாவும், 4000.00 ரூபாவாக வழங்கப்பட்ட கொடுப்பனவு 1000.00 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 5000.00 ரூபாவாகவும் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இறுதி ஆண்டு மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் 5000.00 ரூபாவிலிருந்து 6000.00 ரூபா வரை அதிகரிக்கப்படவிருப்பதாகவும் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த வருடம் 19 கல்வியியல் கல்லூரிகளில் பயிற்சிக்கென 4065 பேர் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். 2014ஆம் ஆண்டு வெளியான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய இவர்கள் இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள். நேர்முகப் பரீட்சை அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது. புதிய மாணவர்கள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் கல்வியியல் கல்லூரிகளுக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.