கவனயீனமாக இருந்தால் நாடு முடக்கப்படலாம்

வலய ரீதியாக முடக்கல் நடவடிக்கை ஒழுங்கான முறையில் முன்னெடுக்கப்படாவிடின் வைரஸ் பரவல் அதிகமாகும் என்றும் அதனால் முழு நாடும் முடக்கப்படும் நிலைக்கு தள்ளப்படும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய நிலையில் நாடு தழுவிய முடக்கல் நிலை அவசியமற்றது. தற்போது எடுக்கப்படும் தீர்மானங்களே நாட்டை முழுமையாக முடக்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஷெனால் பெர்ணாண்டோ ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவிய பிரதேசங்கள் மற்றும் நோயாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்களை அடையாளங்கண்டுள்ளோம். இதன் முழுமையான பொறுப்பு தொற்று நோயியல் பிரிவுடையது. இப்பிரிவு எந்த தகவல்களையும் உரிய அதிகாரிகளிடம் வழங்கவில்லை. எனவே தொற்றுநோய் நிலவும் பகுதிகள் குறித்து மக்களுக்குத் தெரியுமா என்பது மக்களுக்கு ஒரு பிரச்சினையாகும், ”என்றார்.

வைரஸ் தொற்று ஏற்பட்ட நபர், அவருடன் நெருங்கி பழகியவர்களைஇலகுவாக அடையாளங்காணும் வகையில் தொற்றுநோயியல் பிரிவு ஜிபிஎஸ் தொழில்நுட்பம் அல்லது டிஜிட்டல் வரைப்படத்தை தயாரிக்குமாறு வேண்டுகோள்விடுத்தார். மேலும் வர்ண முறைகளை பயன்படுத்தி வைரஸ் அதிகமாக மற்றும் குறைவாக பரவியுள்ள இடங்களை அடையாளப்படுத்தி அனுப்புமாறும் தேவையேற்படின் அபாயகரமான பகுதி மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளை அறிவிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

பாதிக்கப்பட்ட பிரதேசங்கள், இடைநிலை பாதிப்பு பிரதேசம் மற்றும் பாதுகாப்பான பிரதேசம் போன்றவற்றின் துல்லியமான வரைபடத்தை உருவாக்கிய பின்னர், சுகாதார அமைச்சு அதற்கேற்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கலாம், என்றும் டொக்டர் ஷெனால் பெர்னாண்டோ தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435