கவனயீர்ப்புப் போராட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் சமூகம்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் நேற்று (04) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பட்டதாரிகள், பல கோஷசங்களை முன்வைத்தனர். ஆட்சியாளர்களே! உங்கள் வாக்குறுதிகள் பொய்யானது, அனைத்துப் பட்டதாரிகளுக்கும் உடனடியாக வேலை வாய்ப்புக்களை வழங்கு, வேண்டாம் வேண்டாம் பட்டதாரிகளிடையே பாகுபாடு எனக்கூறி அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், முன்னைய காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் இவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்றும், அதாவது, 2012 ஆம் ஆண்டு பட்டம் பெற்ற மாணவர்கள் இருக்க 2016 ஆம் வருட மாணவர்களுக்கு நியமனத்தை இந்த அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்த செயற்பாடு பாதிக்கப்பட்ட மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. அத்துடன் உள்வாரி வெளிவாரி என்ற பாகுபாட்டின் அடிப்படையில் வேலை வாய்ப்பினை வழங்கியுள்ளது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

மேலும் நாம் கடந்த திங்கட்கிழமை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம். அத்தடன் போராட்டத்தின் இறுதியில் அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்திருந்தோம். ஆனால் அரசாங்க அதிபர் உறுதியான பதிலை எமக்கு தரவில்லை.இந்த நிலையிலேயே எமக்கான வேலைவாய்ப்பினை கோரி நாடுதழுவிய ரீதியில் கவனயீப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். எமது கோரிக்கைகளுக்கு அராங்கம் செவிசாய்க்காத விடத்து பாரியளவிலான போராட்டத்தினை முன்னெடுப்போம் என்றனர்.

நன்றி- தினகரன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435