வௌிநாட்டில் தொழில்நாடி சென்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த 858 பேர் இன்று (11) நாடு திரும்பினர்.
வௌிநாட்டு தூதரங்களின் கீழியங்கும் சுரக்ஷா இல்லங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டினால் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்களில் அதிகமானவர் குவைத் சுரக்ஷா இல்லத்தில் தங்கியிருந்தவர்கள் 588 பேராவர்.
பிரச்சினைகள் தீர்க்கப்படாத 146 பேர் இன்னும் சுரக்ஷா மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட பின்னர் அவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படுவர்.
சவுதி அரேபியாவின் ரியாத் நகரத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் சுரக்ஷா இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த18, பேர் நாடு திரும்பியுள்ளனர். மேலும் 33 பேர் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜெட்டா நகரிலுள்ள சுரக்ஷா இல்லத்தில் இருந்த 12 பெண்கள் நாடு திரும்பியுள்ளதுடன் அங்கு தற்போது யாரும் இல்லையென்றும் பணியகம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் அமைக்கப்படடுள்ள தூதரங்களின் 12 தொழிற்பிரிவுகளின் கீழ் முன்னெடுக்கப்படும் சுரக்ஷா இல்லங்களில் இன்னும் 263 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாண்டின் முதல் 6 மாத காலத்திற்குள் 95,908 பேர் தொழில்வாய்ப்பு நாடி வௌிநாடு சென்றுள்ளனர். அவர்களில் 56,526 ஆண்களாவர். இது நூற்றுக்கு 59 சதவீதமாகும். அவர்களில் 16,626 பேர் கட்டார் நாட்டுக்கே தொழில் நாடி சென்றுள்ளனர்.
இவ்வாண்டு ஜனவரி தொடக்கம் ஜூன் வரையான காலப்பகுதியில் 39,383 பேர் வௌிநாட்டுக்கு தொழில்வாய்ப்பை நாடி சென்றுள்ளனர். இது நூற்றுக்கு 41 சதவீதமாகும். அவர்களில் 14,948 பேர் குவைத் நாட்டுக்கே சென்றுள்ளனர்.
இதேவேளை, இவ்வாண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் குவைத்துக்கு 20,601 பேரும் கட்டாருக்கு 19,026 பேரும் தொழில்நாடி சென்றுள்ளனர்.
அதேபோல், சவுதி அரேபியாவிற்கு முதல் ஆறு மாத காலப்பகுதியில் 16,747பேர் சென்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.