இலங்கை கிட்டார் சங்கம் எட்டாவது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ள “Guitar and folk music festival 2018” இசைத் திருவிழா இம்மாதம் 18ம் திகதி தொடக்கம் 28ம் திகதி வரை தெரிவு செய்யப்பட்ட இடங்களில் நடத்தப்படவுள்ளது.
Solidarity Center இலங்கை பிரிவு, இலங்கை வர்த்தக, கைத்தொழில் பொது ஊழியர் சங்கம் மற்றும் சுதந்திர வர்த்தக வலைய பொது ஊழியர் சங்கம் உட்பட பல அமைப்புக்களின் அனுசரணையுடன் சுயாதீன தொலைக்காட்சியின் ஊடக அனுசரணையுடன் இக்கிடார் இசைத் திருவிழா நடைபெறவுள்ளது.
ஶ்ரீ ஜயவர்தனபுர, களனி, மொரட்டுவ, பேராதனை, கட்புல மற்றும் அரங்கக்கலைகள் பல்கலைக்கழகம் மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், கட்டுநாயக்க பொது நூலக கேட்போர்கூடம், காலி, லபுதுவ, தக்ஷினபாய கேட்போர்கூடம், கொழும்பு 7 ரஷ்ய மத்திய நிலையம் மற்றும் கொழும்பு 3 இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் பொது ஊழியர் சங்க கேட்போர் கூடம் என்பவற்றில் நடைபெறவுள்ளது.
ரஷ்யா, இந்தியா, மாலைத்தீவு, பலஸ்தீன் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த புகழ் பெற்ற கிட்டார் கலைஞர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ள இவ்விசைத் திருவிழாவானது இலவசமாக கண்டுகளிக்கும் வாய்ப்பு பல்கலைக்கழக மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கிடைத்துள்ளமை சிறப்பம்சமாகும்.
18.07.2018 – மொரட்டுவ பல்கலைக்கழகம்
19.07.2018 – இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் பொது ஊழியர் சங்கம் (CMU), கொள்ளுபிட்டிய (பிற்பகல் 5.30)
20.07.2018 – ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், நுகேகொட ( பிற்பகல் 3.00 – 5.00)
21.07.2018- ரஷ்யன் மத்திய நிலையம் ( முற்பகல் 9 – 12)
22.07.2018 – சுதந்திர வர்த்தக வலயம், பொதுநூலக கேட்போர்கூடம், கட்டுநாயக்க
23.07.2018 – நகரசபை மண்டபம், களுத்துறை
24.07.2018 – கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம், ரத்மலான
25.07.2018 – களனி பல்கலைக்கழகம், களனி
26.07.2018 – பேராதனை பல்கலைக்கழகம், பேராதனை
28.07.2018 – தக்ஷிபாய கேட்போர்கூடம், லபுதுவ, காலி