கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் ஆலோசகர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பொருத்தமானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
நிரந்தர நியமனம் பெற்றவர்கள் தவிர்ந்த, பதில், தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் சேவைக்கால ஆசிரியர் ஆலோசகர்களும் புதிதாக நியமனம் எதிர்பார்க்கும் ஆசிரியர்களும் இவ்வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று கிழக்கு மாகாண கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அரசாங்க பாடசாலைகளில் வெற்றிடமுள்ள துறையில் 10 வருடங்கள் கற்பித்தல் அனுபவம் உள்ள 50 வயதுக்கும் மேற்படாத இலங்கை ஆசிரியர் சேவையில் முதலாம் தரத்தைச் சேர்ந்தோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய இறுதித் திகதி இம்மாதம் 26ம் திகதியாகும்.
பல்கலைகழக பட்டம், பட்டப்பின் படிப்பு டிப்ளோமா, பட்டப்பின் பட்டம் என்பன தகுதிகளாக கொள்ளப்படும். போட்டிப்பரீட்சை மற்றும் நேர்முகத்தேர்வின் பின்னர் தகுதியானவர்களுக்கு நியமனம் வழங்கப்படும் என்று கிழக்கு மாகாண கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.