கிழக்கில் ஆசிரியர் இடமாற்றத்தினால் ஏற்பட்ட பிரச்சினைக்குத் தீர்வு

கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளில் இருந்து முஸ்லிம் ஆசிரியர்களை மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், முஸ்லிம் பாடசாலைகளுக்கு மாற்றியிருந்ததை அடுத்து, ஏற்பட்டிருந்த பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.என்.கே.மன்சூர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பணிப்பின்பேரில் தமிழ் பாடசாலைகளில் இருந்து மாற்றம் செய்யப்பட்ட முஸ்லிம் ஆசிரியர்களின் இடமாற்றத்தை இரத்துச் செய்ய மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் உத்தரவின்பேரில் இதறை;கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், இடமாற்றம் வழங்கப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களுக்கு, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.என்.கே.மன்சூரினால், கடந்த 24 ஆம் திகதி கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்கள், முன்னதாக பணியாற்றிய பாடசாலைகளில் கட்டாயமாக பணிக்கு சமுகமளிக்க வேண்டம் என அந்தக் கடிதம் மூலம் பணிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, தனது அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி, கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளில் பணியாற்றிய முஸ்லிம் ஆசிரியர்களுக்கு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்துள்ளார் என ஜனாதிபதியிடம் முறையிடப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனினால், ஜனாதிபதியிடம் இந்த முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த விடயம் தொடர்பில் ஆராயந்தபோது, கிழக்கு மாகாணத்தின் தமிழ் பாடசாலைகளில் சேவையாற்றிய 167 முஸ்லிம் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்தள்ளது.

எவ்வாறிருப்பினும், குறித்த இடமாற்றம் தற்போது இரத்துச் செய்யப்பட்டு பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435