கிழக்கு  தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகத்தேர்வு பிற்போடப்பட்டது!

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகத்தேர்வு மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி. முதுபண்டா தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையை கருத்திற்கொண்டு இவ்வாறு நேர்முகத்தேர்வு பிற்போடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் மூன்றாம் மற்றும் நான்காம் திகதிகளில் நேர்முகத்தேர்வு நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேர்முகத்தேர்வுக்கான திகதி மீள அறிவிக்கப்படும் என்று கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435