கிழக்கு பட்டதாரிகள் தொடர்பில் ஜனாதிபதி அறிவுறுத்தல்

கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை 2018 ஆம் ஆண்டுக்குள் வழங்குமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் என கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் முதல் பெப்ரவரி வரையான காலப்பகுதியில் 2000 பட்டதாரிகளை ஆசிரிய சேவைக்குள் உள்ளீர்ப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மே மாதம் அளவில் 790 பட்டதாரிகளை ஆசிரயர் சேவைக்குள் உள்ளிர்ப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள பட்டதாரிகளுக்கான தொழில்வாய்ப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் 2018ஆம்ஆண்டுக்குள் அவர்களுக்கான நியமனங்களை வழங்குமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் தற்போது மேற்கொண்டுவருகின்றோம் என ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435